சங்கு ஊதி அறிவிக்கப்பட்ட சுதந்திரம்! சுதந்திர தின சுவாரஸ்யங்கள்

0
760

இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 70 ஆண்டுகள் முடிந்துவிட்டது. நம் சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகத்தால் ஆங்கிலேய அரசிடமிருந்து நமக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்கள். சுதந்திரம் பெற்ற தினத்தன்று நிகழ்ந்த சுவாரஸ்யமான சில சம்பவங்கள்.

14-1502713503-1

நெருக்கடி : போரின் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா வெகுவாக கரைந்திருந்தது. சொந்த நாட்டையே(இங்கிலாந்து) நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 1945 பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சிஆட்சியைப் பிடித்ததது.

இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

14-1502713512-2

மவுண்ட் பேட்டன் : இந்நிலையில் 1947 பிப்., 10ல் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார்.
உடனடியாக இவர் நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார்.

இது சுமூகமாக முடியவில்லை. காரணம், ஜின்னா தனிநாடு கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். நாட்டில் மக்களிடையே பதட்டமான சூழல் உருவானதால் முன்னதாகவே சுதந்திரம் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

14-1502713532-3

ஆகஸ்ட் 15 : ஆகஸ்ட் 15 தனிப்பட்ட முறையில் விருப்பமான தேதி. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945 ஆக.,15ல் தான் ஜப்பானிய வீரர்கள், ஆங்கிலேயர்களின் கிழக்கு ஆசிய கமாண்டராக இருந்த இவரிடம் சரணடைந்தனர். இதனால் இந்த தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கவிரும்பினார்.

14-1502713543-4

நல்ல நாள் : இந்தியாவுக்கு ஆக., 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஆக., 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 14 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

14-1502713554-5

புகைப்படங்கள் : ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு சுதந்திர விழாவுக்கான முன்னேற்ப்பாடுகள் துவங்கிவிட்டன். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கப்பட்டது.

14-1502713564-6

12 மணி!

அந்த அரங்கில் அவைத்தலைவரின் இருக்கைக்கு மேல் பெரிய கடிகாரம் இருக்கும். இரண்டு முட்களுமே 12 ஐ தொட்டு நிற்க மணி 12 முறை கணீரென்று ஒலித்தது. தொடர்ந்து, அரங்கின் மேல் மாடத்திலிருந்து தேர்ச்சி பெற்ற கலைஞர் ஒருவர் சங்கநாதத்தை ஒலிக்கச் செய்தார். புதிய தேசம் பிறந்து விட்டதற்கான அறிவிப்பு இது.

14-1502713574-7

வந்தே மாதரம்! : அரங்கிலும் வெளியிலும் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைதட்டினார்கள். பின்னர் எல்லாருமாய் இணைந்து வந்தே மாதரம் பாடினார்கள். இந்திய தேசத்திற்காகவும், இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம். உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம். என்ற உறுதி மொழியை நேரு சொல்ல அனைவரும் திரும்பச் சொன்னார்கள்.

14-1502715374-8

இரங்கல் : சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக, அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

14-1502715314-9

முதல் உரை : உணர்ச்சிகரமான அந்த நாளில் மூன்று பேர் உரையாற்றினார்கள். முதலாவதாக இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் ஸமான் பேசினார். இரண்டாவதாக சிந்தனையாளரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார். மூன்றாவதாக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பேசினார்.

14-1502715323-10

முதல் நிகழ்ச்சி
அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியாக, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்புறமும் வலப்புறமும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் உட்கார்ந்தார்கள். தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

14-1502715337-11

தேசியக் கொடி : அரசியல் அமைப்பு சபையில் ஆகஸ்ட் 15 அன்று காலை 10.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
14-1502715347-12

தேசிய கீதம் : இந்தியா சுதந்திரம் பெற்ற 1947, ஆக.15ல் நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை. 1911ல் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்ட ‘ஜன கண மன’ பாடல் 1950ல் தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

14-1502715621-13

காந்தி இல்லை : இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி கோல்கட்டாவில் இருந்தார்.மத மோதல்களை எதிர்த்துஉண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற அன்று, காந்தி தூங்குவதற்கு முன்னால் தன் நண்பர் ஒருவருக்கு கடிதம் எழுதினார். அதில், நான் இருட்டில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன். இந்த தேசத்தை தவறாக வழிநடத்திவிட்டேனோ என்று வருத்தத்துடன் எழுதியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸ் இயக்கத்தையே கலைக்க நினைத்தார் காந்திஜி. சுதந்திரம் பெற்று தந்ததை சொல்லிக்காட்டி மக்களிடம் அதிகாரம் செலுத்துவர் என அவர் நினைத்தார்.

14-1502715384-16

1947 : 1947ல்இந்தியாவின் ஒரு ரூபாய்அமெரிக்காவின்ஒரு டாலருக்கு சமமாக இருந்தது.இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.88.62 பைசா.

14-1502715393-17

சுதந்திர தினம் : இந்தியா சுதந்திர தினம் கொண்டாடும் ஆகஸ்ட் 15 அன்று தென்கொரியா, பஹ்ரைன், காங்கோ ஆகிய மூன்று நாடுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.

இந்தியாவில் சுதந்திரத்தின் போது 1,100 மொழிகள்வழக்கத்தில் இருந்தன. தற்போது 880 மொழிகள் மட்டுமே உள்ளன.

14-1502715402-18நேரு : இந்திய பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவகர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார். அதிகமுறை கொடியேற்றியவர் என்ற பெருமையை நேரு பெறுகிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.