ஒரே ஓவரில் 6 விக்கெட்… இங்கிலாந்தைக் கலக்கும் “பொடி வீரன்”!

0
358
லண்டன்: இங்கிலாந்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அந்த 6 பேரையும் கிளீன் போல்டு செய்து சாதனை படைத்துள்ளார் 13 வயதேயான லூக் ராபின்சன்.

கிரிக்கெட் போட்டி என்பது அனைவராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு விளையாட்டாகும். இதை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ரசிக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைப்போரை தூக்கி வைத்தும் கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்டுள்ள இங்கிலாந்து நாட்டில் 13 வயது சிறுவன் ஒருவர் அபாரமாக விளையாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

12-1502517773-cricket4

இங்கிலாந்தின் வட கிழக்கில், ஃபிலடில்பியா கிரிக்கெட் கிளப் சார்பில் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. டர்ஹம் நகருக்கு அருகில் உள்ள லாங்க்லே பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

12-1502518092-luke1இதில் லூக் ராபின்சன் (13), 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அனைத்து விக்கெட்டுகளும் கிளீன் போல்டு என்பது சிறப்புக்குரியது.

லூக்கின் தந்தை ஸ்டீபன்தான் (45) இந்தப் போட்டியின் ரெஃபரீ. தனது மகன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை கண் கூடாக பார்த்து ரசித்து பெருமைப்பட்டார்.

12-1502518102-luke-robinsonஇதுகுறித்து ஸ்டீபன் கூறுகையில், முதலில் லூக் போட்ட 2 ஓவர்களில் எந்த விக்கெட்டையும் வீழ்த்த வில்லை.

அதன்பின்னர் அவரது பந்து வீசும் முறையை மாற்றுமாறு அறிவுறுத்தியதற்கிணங்க அவர் அபாரமாக பந்துகளை வீசி 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். எனக்கு இது கனவா நனவா என்றே தெரியவில்லை என்றார் ஸ்டீபன்.

ஃபிலடில்பியா கிளப்பின் 149 ஆண்டுகால வரலாற்றில் இப்படி ஒரே ஓவரில் 6 விக்கெட்களை, அதுவும் கிளீன் போல்டாக வீழ்த்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.