முழுக்க துணியால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கான ‘டவல்’ பிராவுக்கு பெருகும் ஆதரவு!!

0
505

`டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக, இந்த புதிய வகை உள்ளாடை குறித்து பெண்களின் சமூக வலைத்தள பக்கங்களில், பல நிறுவனங்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.

முதல் முறை இந்த உள்ளாடையை பார்க்கும் போது, வினோதமாக தெரியும்.

`உறிஞ்சக்கூடிய தன்மையுள்ள துணியினால் உருவாக்கப்பட்ட, மார்பகங்களை மட்டும் மறைக்கக் கூடிய பெண்களுக்கான உடை` மற்றும் `உங்களுக்கு தேவை என்பதை நீங்கள் அறிந்திராத மார்பகங்களுக்கான உடை` என இந்த உள்ளாடைக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

பார்ப்பதற்கு பிகினி உடையின் மேலாடை போல காட்சியளிக்கும் இந்த உள்ளாடை

_97207149_ta-tafacebookdissingடா-டா-டவல் குறித்த கலவையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.

ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

பாரம்பரியமாக, முதலாளித்துவ மேற்குலக சமுதாயம், தங்களது வியாபாரத்திற்காக மார்பகங்களை ஒரு மோகப் பொருள் போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது. இந்த யுக்தி மூலம் பில்லியன்கணக்கான டாலர்கள் பணம் உருவாக்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான மக்கள் ஒரு விடயத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றால், தற்போது கிடைக்கும் பொருட்களை விட `டா-டா-டவல்` செக்ஸ் ஆசைகளை அதிகம் தூண்டக்கூடிய பொருள் இல்லை எனலாம்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளாடை வடிவமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மார்பகங்களை தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆடையை உலகம் கண்டுபிடித்துள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.