ஆடி போயி ஆவணி வரட்டும்!! –குமார் சுகுணா (கட்டுரை)

0
262

ஜெய­ல­லிதா காலில் அமைச்­சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்­சிக்­கா­த­வர்கள் யாரும் இல்லை..

ஆனால், அந்த இரா­ணுவ கட்­டுப்­பா­டுதான் அ.தி.மு.க.வை கம்­பீ­ர­மாக சித­றாமல் வைத்தி­ருந்­தது என்­பது அவ­ரது மறைவின் பின் அமைச்சர்கள் நடந்­து ­கொள்ளும் முறை­மை­களில் தெளி­வாக விளங்­கு­கி­றது.

ஒரு கட்­சி­யி­லி­ருந்து மற்ற கட்­சிக்கு மாறுவது போல அ.தி.மு.க.வுக்கு உள்­ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணி­மா­று­கின்­றனர்.

இதை­யெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலையா­ன­தாக மாறவேண்­டு­மெனில் சிறந்த தலை­மைத்துவம் ஒன்றின் தேவைப்­பாடு தவிர்க்­க­ மு­டி­யா­த­தாக உள்ளது.

ஜெய­ல­லிதா என்ற ஆளு­மையின் மறைவு தமி­ழ­கத்­துக்கு மட்டும் வெற்­றி­டத்தை ஏற்படுத்­த­வில்லை.

இலட்­சக்­க­ணக்­கான தொண்­டர்­களை விட்டு எம்.ஜி.ஆர். இறந்த போது அஸ்­த­ம­ன­மா­னது அ.தி.மு.க. என்­ற­வர்­களின் முன்பு ஓர் இரும்பு பெண்­ம­ணி­யாக மாறி அக்­கட்­சியை இராணுவம் போல கட்­டிக்­காத்து அவர் உரு­வாக்­கிய கோடிக்கணக்­கான தொண்­டர்­களின் நம்­பிக்­கையையும் வெற்­றி­ட­மாக்­கி­யுள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் மரணம் எதிர்­பா­ர­ாததா அல்­லது திட்­ட­மி­டப்­பட்­டதா என்ற பதில் இன்னும் தெளி­வுப்­ப­டுத்­தப்­ப­டாத மர்­ம­மா­கவே உள்ள நிலையில், அவரால் அணு அணு­வாக வடி­வ­மைக்­கப்­பட்ட அ.தி.மு.க. இன்று சிதறி சின்­னா­பின்­ன­மா­கி­யுள்­ளது.

கரு­ணா­நிதி செயற்­தி­ற­னுடன் இருந்­தி­ருந்தால் ஆட்சி என்றோ கலைந்­தி­ருக்கும். ஆனால் கரு­ணா­நி­தி­ய­ளவு அர­சியல் சாணக்­கியம் கொண்ட ஒரு தலைமை தற்­போது தமி­ழ­கத்தில் இல்லை.

இன்று இந்த ஆட்­சியின் ஒவ்­வொரு செயற்­பா­டு­களும் மக்­களை அதி­க­மாக அதிருப்தியடைய வைப்­ப­தா­கவே உள்­ளது.

ஊழல், இலஞ்சம் என்று அமைச்­சர்கள் அணு­தி­னமும் ஏதா­வது ஒரு பிரச்­சி­னையில் சிக்கி தவிக்­கின்ற நிலையில் 3 துண்­டு­க­ளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க. ஒன்­றி­ணைக்­கப்­ப­டுமா என்று பெரும் கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது.

தமி­ழ­கத்தில் மட்டும் அல்ல முழு, இந்­தி­யா­விலும் அ.தி.மு.க.வை மிக பெரிய மாநில கட்­சி­யாக வளர்த்­தெ­டுத்­தவர் ஜெய­ல­லிதா. அகில இந்­திய ரீதியில் தற்­போது 3ஆவது பெரும் கட்­சி­யாக பாரா­ளு­மன்­றத்தில் அங்­கம் ­வ­கிக்கும் அ.தி.மு.க. அதன் தனித்­து­வத்தை இழந்­து­விட்­டது.

anisஇந்­திய வர­லாற்றில் பிர­தமர் ஒருவர் முதல்­வரை வீடு தேடி வந்து பார்த்த அதி­சயம் ஜெய­ல­லிதா காலத்­தில்தான் நடை­பெற்­றது.

ஆனால் இன்று மத்­திய அரசு செய் என்­ப­தற்கு முன்­னரே ஆளும் அ.தி.மு.க. செய்து முடித்து விடு­கின்­றது.

ஜெய­ல­லிதா இறந்த பிறகு, அ.தி.மு.க. 2 அணி­க­ளாக பிரிந்­த­தோடு சசி­கலா தலை­மை­யி­லான அணி ஆட்­சி­யையும் கட்­சி­யையும் கைப்­பற்­றி­யி­ருக்­கி­றது.

ஓ.பன்னீர் செல்வம் தலை­மை­யி­லான அணி தங்கள் பக்­கம்தான் தொண்­டர்கள் இருப்பதாக கூறி­வ­ரு­கி­றது.

ஆயினும், பன்­னீர்­செல்வம் தலை­மையில் இருந்த 12 எம்.எல்.ஏ.க்களில் இருவர் சசிகலா அணியில் இணைந்­து­விட்ட நிலையில், அவ­ருக்கு 11 எம்.பி.க்களும், 10 எம்.எல்.ஏ.க்களும் மட்­டுமே ஆத­ரவு தரு­கின்­றனர்.

பெரும்­பா­லான நிர்­வா­கிகள் சசி­கலா அணி­யில்தான் இருக்­கி­றார்கள். இத­னி­டையே பா.ஜ.க. தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யகக் கூட்­டணி அர­சி­லா­வது தங்­களை இணைத்துக் கொள்­ள­வேண்டும் என்று ஓ.பன்­னீர்­செல்வம் அணி­யினர் பிர­தமர் மோடியை வற்­பு­றுத்தி வரு­கி­றார்கள்.

இது தொடர்பில் பா.ஜ.க. தலைவர் ஒரு­வர்,­ இதனை வற்­பு­றுத்தல் என்று சொல்­லக்­கூ­டாது, தங்­க­ளு­டைய இருப்பை உறு­தி­செய்ய மத்­திய அமைச்­ச­ர­வையில் இடம் வேண்டும் என்று கெஞ்­சு­கி­றார்கள் என்று தெரி­வித்தார்.

இரண்டு அணி­யி­னரும் பா.ஜ.க.வை போட்­டி­போட்டு ஆத­ரிப்­பதால் எந்த ஒரு அணி­யையும் பகைத்­துக்­கொள்ள பா.ஜ.க.விரும்­ப­வில்லை.

எனவே, இரண்டு அணி­களும் தங்­க­ளுக்குள் இணக்­க­மான முடிவை எடுக்­கும்­ப­டியும், பிற­குதான் மத்­திய அமைச்­ச­ர­வையில் இணைப்­பது குறி­த்து பேச முடியும் என்றும் பிர­தமர் மோடி போக்குக் காட்டி வரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.

இரண்டு அணி­யி­ன­ருமே மத்­திய அமைச்­ச­ர­வையில் இடம்­பெற விரும்­பு­வதால் பா.ஜ.க.தலை­வர்கள் அவர்­களைச் சமா­ளிக்க பல தந்­தி­ரங்­களை கையாள்­வ­தாக தெரி­கி­றது.

இதே­வேளை இரட்டை இலை­ சின்­னத்தை சசி­கலா தலை­மை­யி­லான அணிக்கு கொடுப்­பதை பன்னீர் அணியும், பன்னீர் அணிக்கு கொடுப்­பதை சசி­கலா அணியும் எதிர்க்­கின்­றன.

அதே­ச­மயம் இரட்டை இலைச் சின்­னத்தை யாருக்­குமே தராமல் இரு­வரும் இணைந்­தால்தான் அது­கு­றித்து முடி­வெ­டுக்­கப்­படும் என்று பா.ஜ.க. கூறி­விட்­டது.

இந்­நி­லையில், இரண்டு அணி­களும் நடத்­திய ஆலோ­சனைக் கூட்­டத்தில் இணைப்பு என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று கூறி­விட்­டன.

விருப்­ப­முள்­ள­வர்கள் தங்கள் அணியில் சேரலாம் என்று இரண்டு அணி­க­ளுமே அறி­வித்­துள்­ளன.

ஆயினும் இணைப்பு குறித்து இர­க­சிய பேச்­சு­வார்த்­தை நடை­பெ­று­வ­தாக தெரிவிக்கப்படு­கின்­றது.

இதே­வேளை பன்னீர் அணி­யினர் ‘‘சசி­கலா குடும்­பத்தை நீக்க வேண்டும், ஜெய­ல­லிதா மரணம் குறித்து விசா­ரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்ற 2 பிர­தான நிபந்­த­னை­களை முதல்வர் எடப்பாடி பழ­னி­சாமி அணி­யினர் ஏற்­றுக்­கொண்டால் அ.தி.மு.க. அணிகள் இயற்­கை­யா­கவே இணைந்­து­வி­டும என்­கின்­றனர்.

ஆனால் பழ­னி­சாமி அணியில் உள்ள பலரும் சசி­க­லா­வையே பொது­செ­ய­லாளர் என்று கூறி­வ­ரு­கின்­ற­மையால் இது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே உள்­ளது.

இதே­வேளை இரு அணி­க­ளையும் 60 நாட்­களில் இணைக்­கின்றேன் என்று சிறையில் இருந்­த­வாறே சசி­கலா சபதம் எடுத்­தி­ருந்தார்.

ஆயினும் சசி­கலா சொத்­துக்­கு­விப்பு வழக்கில் சிறைக்கு சென்­றமை, தின­கரன் இரட்டை இலைக்கு இலஞ்சம் கொடுத்து சிறைக்கு சென்­றமை என்­பன சசி­கலா அணியை இரண்­டாக மாற்­றி­யது.

அமைச்சர் ஜெய­குமார் உள்­ளிட்டோர் தின­க­ர­னையும் சசி­க­லா­வையும் வெளிப்­ப­டை­யாக எதிர்க்­கின்­றனர். தம்­பித்­துரை உள்­ளிட்டோர் ஆத­ர­வாக கருத்து வெளியி­டு­கின்­றனர்.

ஆனால் சசி­க­லாவின் தயவால் முதல்­வ­ரா­கிய எடப்­பாடி மட்டும் எதுவும் கூறாமல் தொடர்ந்து அமை­தி­காத்து வரு­கின்றார். ஆயினும் தொடர்ந்து ஆட்­சியை காப்­பாற்ற மத்திய அரசு என்ன சொன்­னாலும் அதற்கு தலை­யாட்டும் கைப்­பா­வை­யா­கவே செயற்ப­டு­கின்றார்.

இந் நிலையில் இரட்டை இலை பிரச்சினையில் சிறைக்கு சென்ற தின­கரன் சிறை­யி­லி­ருந்து திரும்­பி­யதும் பிள­வுப்­பட்ட அ.தி.மு.க. வை இணைப்­ப­தற்கு கால அவ­காசம் கொடுத்­தி­ருந்தார்.

அதற்­கி­ணங்க அவர் விடுத்த கெடு முடி­வ­டைந்­துள்ள நிலையில் அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

பெங்­க­ளூ­ருவில் உள்ள பரப்­பன அக்­ர­ஹாரா மத்­திய சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அ.தி­.மு.க. பொதுச் செய­லாளர் சசி­க­லாவை சந்­தித்த அவர், கட்சி அலு­வ­ல­கத்­திற்­கு தான் செல்வேன் என்று கூறினார். ஆனால் எப்­போது செல்வேன் என்று கூற­வில்லை.

மேலும் தற்­போது கட்சி சரி­யில்லை. 3 மாதம் கட்­சியை நம்பி ஒப்­ப­டைத்தேன். ஆனால் கட்சி கட்­டுப்­பா­டாக இல்லை என்­ப­துதான் டி.டி.வி. தின­க­ரனின் கருத்து.

எனவே கட்சியை வலுப்­ப­டுத்த வேண்­டிய கடமை துணை பொதுச்­செ­ய­லா­ள­ரான தனக்கு மட்­டுமே இருக்­கி­றது என்று கூறி­யுள்ளார்.

மேலும் 122 எம்.எல்.ஏ.கள் தனக்கு ஆத­ர­வாக உள்­ள­தா­கவும் ஆகஸ்ட் 5 ஆம் திக­தி­யான இன்று முதல் கட்­சியை கவ­னிக்கப் போவ­தாகவும் தின­கரன் கூறி­னாலும், அதற்கு முன்னர் கட்­சியை வலுப்­ப­டுத்த மாநிலம் முழு­வதும் சுற்­றுப்­ப­யணம் செய்து தொண்­டர்­களை சந்­திக்கப் போகி­றாராம்.

பின்­னர்தான் கட்சி அலு­வ­ல­கத்­திற்கு வரப்­போ­வ­தாக அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் கூறி வரு­கின்­றனர். ஏன் எனின் இது ஆடி மாதம் என்பதனால் இந்துக்கள் இம் மாதத்தில் நல்ல விடயங்களில் ஈடுபட மாட்டர்கள்.

ஜாதக சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கையுள்ள சசி குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் இது ஆடி மாதம் என்­பதால் தற்போது கட்சி அலுவலகம் செல்ல முயற்சிக்க மாட்டார்.

எனவே தான் மீண்டும் கட்சி அலு­வ­லகம் செல்ல நல்ல நாள் பார்த்து வரு­கிறார். ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பிற­குதான் ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறக்­கி­றது.

எனவே கட்சி அலு­வ­ல­கத்­திற்கு தின­கரன் இப்­போ­தைக்கு வர­மாட்டார். இது எடப்­பாடி அணிக்கு சற்றே ஆறுதல் தரும் செய்­திதான்.

கடந்த 6 மாதங்­களில் எடப்­பாடி பழ­னி­சாமி முதல்­வ­ராக பல மாவட்­டங்­களில் சுற்­றுப்­ப­யணம் செய்து மக்கள் மனதில் தன் முகத்தை பதி­ய­வைத்து விட்டார். அவ­ரது செயற்­பாடு கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு ஓர­ள­விற்கு பரிச்­ச­ய­மா­கி­விட்­டது.

என­வேதான் ஈ.பி.எஸ். தலை­மையில் ஆட்சி நன்­றா­கவே செயல்­ப­டு­கி­றது என்று கூறி வரு­கின்­றனர் டி.டி.வி. தின­கரன் ஆத­ர­வா­ளர்கள்.

முதலில் கட்சி அப்­புறம் ஆட்சி இப்­போ­தைக்கு கட்­சியை தனது கட்­டுப்­பாட்டில் கொண்டு வர­வேண்டும் என்­ப­துதான் தின­க­ரனின் திட்டம், சில மாதங்­க­ளுக்குப் பின்­னரே ஆட்­சியை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரலாம் என்று நினைக்­கி­றாராம்.

தனக்கு அன்­ப­ரான ஒரு­வரை முதல்­வ­ராக்கும் எண்­ணமும் தின­கரன் கையில் இருக்­கி­றதாம். எது எப்­ப­டியோ அ.தி­.மு­.க.வின் தலை­மை­ தான்தான் என்று ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணி­யி­ன­ருக்கு உணர்த்த வேண்டும் என்று தினகரன் முடிவு செய்­துள்ளார். தன்­னு­டைய அடுத்த கட்ட காய் நகர்­வு­களை அதற்­கேற்றால் போல தொடங்­கி­விட்டார் தின­கரன்.

இந் நிலையில் கட்சி அலு­வ­ல­கத்­திற்கு தான் செல்வேன் என்று கூறி­யுள்ள தின­க­ரனை எடப்­பாடி தரப்பு கட்சி அலு­வ­ல­கத்­திற்குள் நுழைய அனு­ம­திக்­கா­விட்டால் என்ன நடக்கும்.

உண்­மையில் அவ­ருக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆத­ரவு உள்­ளதா அப்­ப­டியே இருந்­தாலும் ஆட்­சியைக் கவி­ழ்க்க அவர் விரும்­பு­வாரா என்று பொருத்­தி­ருந்து பார்ப்போம்…

ஜெய­ல­லி­தா­வையே 30 வரு­டங்­க­ளுக்கு மேல் நிழ­லாக பின்­னா­லி­ருந்து இயக்­கிய சசி­கலா. அவர் உயி­ரி­ழந்­ததும் நிஜ­மாக முயற்­சித்தார்.

அதனால் சசி­கலா உற­வுகள் அ.தி.மு.க.வை தன் கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்­கவே முயற்­சிப்பர்.. எடப்­பா­டியை கூட முதல்­வ­ராக்­கி­யது சசி தரப்­புதான்.. இந்­நி­லையில் கட்­சியை தங்­க­ளது கட்­டுப்­பாட்டில் வைப்­ப­தற்­காக நிச்­ச­ய­மாக தின­கரன் களம் இறங்­குவார்.. அவ­ரது உற­வி­ன­ரான திவா­கரன் கூட அண்­மையில் இதனை வெளிப்­ப­டை­யாக செய்­தி­யாளர் சந்­திப்பில் தெரி­வித்­தி­ருந்தார்.

இரட்டை இலை ஊழல் வழக்கில் இருந்து கூட தின­கரன் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இது அவ­ருக்கு சாத­க­மா­னதே..

ஜெய­ல­லிதா காலில் அமைச்­சர்கள் விழுந்து வணங்கும் போதெல்லாம் அதனை விமர்­சிக்­கா­த­வர்கள் யாரும் இல்லை.. ஆனால்… அந்த இரா­ணுவ கட்­டுப்­பா­டுதான் அ.தி.மு.க.வை கம்­பீ­ர­மாக சித­றாமல் வைத்­­தி­ருந்­தது என்­பது அவ­ரது மறைவின் பின் அமைச்­சர்கள் நடந்­து­கொள்ளும் முறை­மை­களில் தெளி­வாக விளங்­கு­கி­றது. ஒரு கட்­சி­யி­லி­ருந்து மற்ற கட்­சிக்கு மாறு­வது போல அ.தி.மு.க.வுக்கு உள்­ளேயே எம்.எல்.ஏ.க்கள் அணி­மா­று­கின்­றனர். இதை­யெல்லாம் தடுத்து கட்சி மீண்டும் நிலை­யா­ன­தாக மாற வேண்­டு­மெனில் சிறந்த தலை­மைத்­துவம் ஒன்றின் தேவைப்­பாடு தவிர்க்­க­மு­டி­யா­­த­தாக உள்­ளது.

ஆனால் அ.தி.மு.க.வில் அந்தகைய ஒரு தலைமைத்துவம் இனி வரப்போவதில்லை. நிரப்ப முடியாத இந்த வெற்றிடத்தில் கால் பதிக்க சசி தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் மேய்ப்பன் இல்லாத மந்தை கூட்டம் போல மாறிபோயுள்ள அ.தி.மு.க. வை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் தற்போது தினகரன் தன் காய் நகர்த்தல்களை ஆரம்பித்து வருகின்றார்.

ஆனால் தமிழகத்தில் கால் பதிக்க அ.தி.மு.க. வின் தாங்கலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு பலமான தலைமைத்துவம் ஒன்று மீண்டும் அ.தி.மு.க. வுக்கு வருவது எந்தளவு விருப்பமானது என்பதுகேள்வி குறியே…

அதனால் தினகரன் மீண்டும் ஏதாவது ஒரு வழக்கில் சிறைக்கு சென்றால் கூட அது வியப்பில்லை… பொருந்திருந்து… பார்ப்போம்… 122 எம்.எல்.ஏக்கள் தன்னிடம் இருப்பதாக தினகரன் கூறுவது உண்மை என்றால் ஆட்சி மாற்றத்தை கூட அவர் ஏற்படுத்தலாம்..

ஆவணியில் வெளிவரப்போகும் தினகரனின் அதிரடி தமிழக அரசியலில் பூகம்பத்தை ஏற்படுத்துமா இல்லை புஸ்வாணமாகுமா என்று…

–குமார் சுகுணா–

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.