கரணம் தப்பினால் மரணம்.. தினமும் உயிரை பணயம் வைக்கும் பிஞ்சுகள்: திகில் வீடியோ!!

0
264

இந்தியாவில் பள்ளி குழந்தைகள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து பாய்ந்து ஓடும் அபாயகரமான ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் தொடர்கிறது.

இமாச்சல பிரதேசத்தில் சம்பா மாவட்டம் உபிப் கிராமத்திலே இச்சம்பவம் அரங்கேறி வருகிறது.

இந்த வெள்ளத்தில் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டாலும் அவர்களின் அழுகையை கேட்ககூட நாதியில்லாத நிலையில் தான் அரசு உள்ளதாம்.

குறித்த வீடியோவில், பாய்ந்து அபாயகரமாக ஓடும் ஆற்றின் குறுக்கே பள்ளி மாணவர்கள் ஒருவரை கையை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இவ்வழியாகவே அவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.

தற்போது வரை எந்த அசம்பாவிதமும் நடைபெறாத நிலையில் இனி நடந்தால் அதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதை தடுக்க மாநில அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.