பெண்கள் உலகக் கோப்பை: நியூசிலாந்தை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

0
262

பெண்கள் உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை 79 ரன்னுக்குள் சுருட்டி, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

இங்கிலாந்தில் பெண்களுக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையோடு இந்தியா களம் இறங்கியது.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா, மிதாலி ராஜ் (109), ஹர்மன்ப்ரீத் கவுர் (60), வேதா கிருஷ்ண மூர்த்தி (45 பந்தில் 70 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனை காஸ்பெரெக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.

அந்த அணியின் தொடக்க வீராங்கனை சுஷி பேட்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் ஷிகா பாண்டே பந்தில் ஆட்டம இழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ரசெல் பிரிஸ்ட்-ஐ 5 ரன்னில் வெளியேற்றினார் கோஸ்வாமி. இதனால் நியூசிலாந்து அணி 7 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.

அதன்பின் வந்த சட்டர்வைட் 26 ரன்னிலும், கேதே மார்ட்டின் 12 ரன்னி்லும் அவுட் ஆனார்கள். இருவரும் அவுட்டாகும்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த நியூசிலாந்து வீராங்கனைகள் சீட்டுக்கட்டுகள் போல் மளமளவென சரிந்தனர். கடைசி ஐந்து விக்கெட்டுக்களை 27 ரன்னுக்குள் இழந்து, 79 ரன்னில் ஆல்அவுட் ஆனது நியூசிலாந்து.

நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட்டாக்கிய இந்தியா, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கயாக்வார்ட் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.