புதிய உலக அதிசயம்..! 86 வயது மூதாட்டி கட்டிய செராமிக் அரண்மனை..! (படங்கள்)

0
956

சீனாவின் ஜிங்டெஸென் பகுதியில் வசிக்கும் 86 வயது யு எர்மெய், 5 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் அரண்மனையைக் கட்டியிருக்கிறார்!

இந்தக் கட்டிடத்தின் உட்பக்கமும் வெளிப்பக்கமும் செராமிக் துண்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.

“இது என்னுடைய லட்சியக் கட்டிடம். இதைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகின. இப்போதுதான் என் வாழ்க்கை முழுமையடைந்ததுபோல உணர்கிறேன்.

என் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் செராமிக் தொழிற்சாலைகளில்தான் வேலை செய்திருக்கிறேன்.

எனக்குத் தொழில் பற்றிய அனுபவம் கிடைத்தவுடன், ஒரு செராமிக் தொழிற்சாலையை ஆரம்பித்தேன்.

சாதாரணமாக இருந்த எங்கள் குடும்பம், பணக்காரக் குடும்பமாக மாறியது. அதனால் செராமிக் மீது ஆர்வமும் மரியாதையும் அதிகரித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக செராமிக் பொருட்களைச் சேகரித்து வந்தேன். தட்டுகள், ஜாடிகள், கோப்பைகள், ஓவியங்கள், பாத்திரங்கள், ஜன்னல்கள் என்று 60 ஆயிரம் பொருட்கள் சேர்ந்தவுடன் இந்த அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தேன். 1,200 சதுர மீட்டர்கள் கொண்ட வட்ட வடிவிலான இந்தக் கட்டிடத்துக்கு, 80 டன் உடைந்த செராமிக் துண்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறோம்.

என் வாழ்க்கைக்குப் பிறகும் செராமிக் புகழைச் சொல்லிக்கொண்டு இந்தக் கட்டிடம் நின்றுகொண்டிருக்கும்.

சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்கு வரும்போது, அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையும் மேம்படும்” என்கிறார் யு எர்மெய்.

35D0E40700000578-3667529-image-a-3_146728666171135D0E2C600000578-3667529-image-a-4_146728666584335D0EAA400000578-3667529-image-m-11_146728776155735D0EAA800000578-3667529-image-a-5_146728669184735D0E41E00000578-3667529-image-a-7_146728670368035D0EA9C00000578-3667529-image-a-8_146728670990235D0EAB000000578-3667529-image-a-9_146728671485035D0E3F300000578-3667529-image-a-6_146728669698435D0E40F00000578-3667529-image-a-10_1467286724972

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.