எனக்கு 16, உனக்கு 71!: மூதாட்டியை காதலித்து மணந்த 16 வயது பேராண்டி – வீடியோ!

0
619

காதலுக்கு கண்களில்லை என்பார்கள். ஆனால், இதுபோன்ற காதல் கதைகளை பார்க்கும் போது. யாரேனும் நல்ல டாக்டர் காதலுக்கு கண் ஆப்ரேஷன் செய்து, ரோமியோ ஜூலியட், அம்பிகாவது, அமராவதி செய்த அந்த உன்னத காதலை காப்பாற்றினால் மனதுக்கு சற்றே நிம்மதி கிடைக்கும்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் தென் சுமத்திரா பகுதியில் ஒரு காதல் திருமணம் நடந்துள்ளது. அது தேசம் முழுக்க வியப்பை அளித்து புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அதற்கு காரணம் மணமகன் (செலாமட் ரியாடி ) வயது 16, மணமகள் (ரோஹாயா) வயது 71.

எனக்கு 16, உனக்கு 71!

நினைத்து பார்க்கும் போதே பலருக்கு மாரடைப்பை தரும் இந்த நிகழ்வு. தென் சுமத்திராவில் சாத்தியமாகியுள்ளது. 16 வயது நிரம்பிய அந்த பாலகன், 71 வயது நிரம்பிய மூதாட்டியை திருமணம் செய்துள்ளான். அதும் காதலித்து.

55 வயது வித்தியாசத்தில் தாத்தா ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்தாலே மக்கள் வெகுண்டெழுவார்கள். இங்கே அதுவே தலைகீழாக நடந்துள்ளது. இதை கண்டு குடும்பத்தார் ஆரம்பத்தில் கடுப்பாகி போயுள்ளனர்.

ஆயினும், தங்கள் இரு குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கி, அவர்களை ஆசுவாசப் படுத்தி தான் இவர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பது ஆச்சரியத்திற்கே ஒரு ஆச்சரியக்குறி வைப்பது போல இருக்கிறது.

வீட்டிலேயே திருமணம்!

இந்த விசித்திர திருமணம் அருகாமையில் இருந்த குச்வோயோ என்பவரது வீட்டில் இவர்களுடைய திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இவர் தான் அந்த ஊர் தலைவர் போல. இந்தோனேசியாவில் இதை சிலர் நம்பவில்லை என்பதற்காக இவர், இந்த திருமணம் உண்மை தான் வெளிப்படையாக கூறியுள்ளார்.

வரதட்சணை!

இந்த விசித்திர திருமணத்தில் அந்நாட்டு பண மதிப்பில் இரண்டு இலட்சம் என்ற அளவில் வரதட்சனை வேறு கொடுத்துள்ளனர். அதுவும் திருமணத்திற்கு முன்னவே.

04-1499166275-6

சட்டம் என்ன சொல்கிறது?

இந்தோனேசியாவில் ஒரு ஆண் 19 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும். ஆயினும், பல லூப்ஹோல்கள் பயன்படுத்தி அங்கே சிறார் திருமணம் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.