நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்

0
178

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று எழுதிய கடிதத்துக்கு, இன்று பிற்பகல் அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட அமைச்சர்களை விசாரணையில் எந்த இடையூறும் செய்யக் கூடாது என்று தாம் வலியுறுத்துவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் தாம் தொடர்பில் இருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எல்லாம் நலமாக அமையட்டும் என்றும், வெகு விரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பாக மேலதிக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து, வடக்கு மாகாண அரசியலில் கடந்த பல நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.