வடமாகாண சபையின் எதிர்காலம்? – என்.கண்ணன் (கட்டுரை)

0
337

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதை

கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

வடக்கு அர­சியல் களத்தில் திடீ­ரென ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களும் திருப்­பங்­களும், வடக்கு மாகா­ண­ச­பையின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றன.

2013 செப்­டெம்பர் மாதம் நடந்த வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலில், மொத்­த­முள்ள 38 ஆச­னங்­களில் 30 ஆச­னங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­றி­யி­ருந்­தது.

மூன்றில் இரண்டு பங்­கிற்கும் அதி­க­மான பெரும்­பான்மை பலத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக மக் கள் ஆணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இப்­போது வடக்கு மாகாண அர­சி­ய லில் ஏற்­பட்­டுள்ள உள்­ளக குழப்­பங்கள், வடக்கு மாகா­ண­ச­பையின் ஆட்­சியின் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யி­ருக்­கி­றது.

வடக்கு மாகா­ண­ச­பையின் ஆயுள்­காலம் முடி­வ­தற்கு இன்­னமும், 15 மாதங்கள் வரையே, இருக்­கின்­றன.

கிட்­டத்­தட்ட மூன்­றரை ஆண்­டு­க­ளுக்கும் மேலான காலத்தில் வடக்கு மாகா­ண­சபை மிகப்­பெ­ரிய சாத­னைகள் என்று எதையும் நிகழ்த்தி விட்­ட­தாக கூற முடி­யாது.

ஆனாலும், அதற்­ காக அதன் செயற்பா­டு­களைக் குறை த்து மதிப்­பி­டு­வது பொருத்தமல்ல.

மக்­களின் எதிர்­பார்ப்பு மிகை­யா­ன­தா­கவும், அதற்­கேற்ற வினைத்திறன் மாகாண அரசிடம் இல்­லா­ததும், வடக்கு மாகாண சபை அர­சாங்கம் மீதான அதி­ருப்­தி­க­ளுக்கு முக்­கிய காரணம்.

கடந்து போன காலத்தில் தடைகள், தடங்­கல்கள், நெருக்­க­டி­களை எதிர்கொண்டிருந்தாலும், எஞ்­சி­யுள்ள காலத்­தி­லா­வது, தவ­று­களைத் திருத்தி, வடக்கு மாகா­ண­சபை திற­மை­யுடன் செயற்­பட வேண்டும் என்­பதே, மக்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது.

ஆனால், வடக்கு மாகாண அர­சுக்குள் இப்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­பங்கள், வடக்கு மாகா­ண­ச­பையின் எதிர்­காலம் குறித்த சந்­தே­கங்­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன. அடுத்து என்ன நடக்கும் என்று உறுதி செய்ய முடி­யாத நிலையே இந்தப் பத்தி எழு­தப்­படும் வரை நீடிக்­கி­றது.

முத­ல­மைச்­ச­ராக விக்­னேஸ்­வரன் நீடிப்­பாரா- புதிய முத­ல­மைச்சர் தெரிவு செய்யப்படுவாரா- மாகா­ண­ச­பையை கலைத்து தேர்­தலை நடத்­து­மாறு ஆளு­ந­ரிடம் முத­

ல­மைச்சர் கோரு­வாரா- தொடர்ந்து முத­ல­மைச்­ச­ராக சி.வி.விக்­னேஸ்­வரன் நீடித் தால் கூட, வடக்கு மாகா­ண­ச­பையை அவரால் எந்தப் பிரச்­சி­னை­யு­மின்றி நடத்

தக் கூடி­ய­தாக இருக்­குமா? என்று பல கேள்­விகள் தொடர்ந்து கொண்டே இருக்­கின்­றன.

ஆளும்­கட்­சிக்குள் தோன்­றி­யி­ருக்­கின்ற அதி­கார இழு­ப­றி­யினால், தமிழ் மக்­களின் பெரும் எதிர்­பார்ப்­புடன் உரு­வாக்­கப்­பட்ட வடக்கு மாகா­ண­சபை செய­லி­ழந்து போகின்ற சூழல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

இப்­போது தோன்­றி­யுள்ள பிரச்­சி­னை கள் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் வரை சென்று விட்ட நிலை­யிலும், முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வான அணி­யொன்று பகி­ரங்­க­மாக உருவாகி விட்ட நிலை­யிலும், வடக்கு மாகா­ண­ச­பையில் இனி எது நடந்­தாலும் சுமுகமான சூழல் இருக்கும் என்றும் எதிர்­பார்க்க முடி­யாது.

அதா­வது எந்த இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டாலும் கூட, முத­ல­மைச்சர் விக்னேஸ்வரனால் மாகாண நிர்­வா­கத்தை சீராக செயற்­ப­டுத்தும் சூழலும் வாய்ப்பும் கிடைக்கும் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை.

முடிந்­த­வ­ரைக்கும் இரண்டு அணி­களும் குழப்பம் விளை­விக்­கவே முனையும் என் ­பது மாத்­திரம் பிரச்­சி­னை­யில்லை. அதையும் தாண்டி எஞ்­சி­யுள்ள காலத்தில் மாகாணசபையின் நிர்­வா­கத்தைக் கொண்டு நடத்­து­வ­தற்கு அமைச்­சர்­க­ளையும் நியமிக்க வேண்டும்.

இரண்டு அல்­லது நான்கு அமைச்­சர்­களைப் புதி­தாக நிய­மிக்க முற்­படும் போது, முதலமைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு இன்­னொரு பெரும் தலை­யிடி காத்­தி­ருக்கும்.

தமி­ழ­ரசுக் கட்சித் தலை­மை­யுடன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டாலும், புதிய அமைச்­சர்கள் நிய­மன விட­யத்தில் அவர், தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணங்கிப் போகவோ, அவ­ருடன் தமி­ழ­ரசுக் கட்சி இணங்கிப் போகவோ தயா­ராக இருக்­குமா என்­பது சந்­தேகம்.

ஒரு­வேளை கட்­சிக்கு அப்பால், தனக்கு வச­தி­யா­ன­வர்­களை முத­ல­மைச்சர் விக்னேஸ்வரன் அமைச்­சர்­க­ளாக நிய­மித் தால், கூட அவர்­க­ளுக்கு எதி­ராக ஆளும்கட்சி­யி­னரே போர்க்­கொடி உயர்த்தும் நிலை ஏற்­ப­டலாம்.

அதை­விட, சபையில் ஒவ்­வொரு பிரே­ர­ணையை நிறை­வேற்றும் போதும், தனக்கு எதிர்ப்புத் தெரி­வித்­த­வர்கள், என்ன செய்­வார்­களோ என்ற கலக்கம் முத­ல­மைச்­ச­ருக்கு இருந்து கொண்­டி­ருக்கும். ஏனென்றால் சந்­தர்ப்பம் பார்த்து அவரைத் தோற்­க­டித்து விடும் வாய்ப்­பு­க­ளையும் நிரா­க­ரிக்க முடி­யாது.

முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நிலைப்­பாட்டைக் கொண்­டுள்­ள­வர்கள் வடக்கு மாகாணசபையில் பலத்­துடன் இருப்­பது, நிச்­ச­ய­மாக அத்­த­கைய அச்­சு­றுத்­தலை ஏற்படுத்தும்.

அதே­வேளை, புதிய அமைச்­சர்­களை நிய­மிக்­கா­மலும் முத­ல­மைச்­சரால் நீண்டகாலத்துக்கு மாகாண நிர்­வா­கத்தை முன்­னெ­டுக்க முடி­யாது.

ஏற்­க­னவே முதலமைச்­ச­ரிடம் இருந்த துறைகள், அவ­ருக்கு அதிக வேலைப்­பளு என்று கூறி ஏனைய அமைச்­சர்­க­ளிடம் பகி­ரப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலையில், தனி ஒரு­வ­ராக எல்லா அமைச்­சுக்­க­ளையும் நீண்ட நாட்­க­ளுக்கு கவ­னித்துக் கொள்ள முனைந்தால், அது மாகா­ண­சபை நிர்­வா­கத்தை மேலும் சீர்­கு­லைத்து விடும்.

அதை­விட இந்தக் காலப்­ப­கு­தியில் அரச நிர்­வா­கத்தில் தெரிந்தோ தெரி­யா­மலோ நிகழும் தவ­று­க­ளுக்கும் முத­ல­மைச்­சரே நேர­டி­யாகப் பொறுப்­பேற்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இப்­போதும் நீதி­ய­ரசர் என்ற மனோ­நி­லையில் இருந்து இறங்கி வர மறுக்கும் முத­ல­மைச்­ச­ருக்கு நிச்­ச­ய­மாக அப்­ப­டி­யொரு பொறுப்பை ஏற்­றுக்­கொள்ளும் மனோ­நிலை வரப்­போ­வ­தில்லை.

ஒரு வேளை இரண்டு மூன்று மாதங்­க­ளுக்கு அமைச்­சர்கள் நிய­மன இழு­பறி நீடித்தால் கூட, முத­ல­மைச்­சரால் தாங்க முடி­யாத நெருக்­கடி ஏற்­படும்.

அதே­வேளை, விக்­னேஸ்­வ­ரனை நீக்கி விட்டு புதி­ய­தொரு முதல்வர் நியமிக்கப்பட்டாலும் கூட, வடக்கு மாகாண நிர்­வாகம் சீர்­பெற்று விடும் என்று கூற முடி­யாது. ஆளும்­கட்­சியின் உறுப்­பி­னர்கள், சரி பாதி­யாக பிள­வு­பட்டு நிற்­கி­றார்கள். இதனை செங்­குத்­தான பிளவு என்று கூறலாம்.

இந்தக் கட்­டத்தில் நம்­பிக்கைத் தீர்­மானம் அல்­லது நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் மாத்தி­ர­மன்றி, எந்­த­வொரு பிரே­ர­ணை­யையும் நிறை­வேற்­று­வ­தற்கு ஏனைய கட்சிகளின் தயவை நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலையே இரண்டு தரப்­பு­க­ளுக்கும் ஏற்படும்.

அவ்­வா­றான ஒரு நிலையில் வடக்கு மாகா­ண­ச­பையின் நிர்­வா­கத்தில் வெளித் தலையீடுகள் ஏற்­ப­டு­கின்ற சூழலும் உரு­வாகும்.

அதை­விட, புதிய முதல்­வரின் கீழ் ஆட்சி அமைக்­கப்­ப­டு­கின்ற நிலை ஒன்று ஏற்­பட்டால் கூட, அமைச்­சர்கள் நிய­ம­னத்தில் குழப்­பங்கள் உரு­வா­கலாம்.

ஏற்­க­னவே இருந்த அமைச்­சர்­களை நிய­மிக்க முடி­யாது. அப்­படி நிய­மித்தால், அது ஊழலுக்கு துணை­போ­ன­தா­கவும், ஊழல் அமைச்­ச­ரவை என்றும் முத்­திரை குத்­தப்­படும்.

அவர்­களை விலக்கி விட்டு புதிய அமைச்­சர்­களைத் தெரிவு செய்தால், அதே­போன்று முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் தமி­ழ­ரசுக் கட்சி ஒத்­து­ழைத்­தி­ருக்­க­லாமே என்ற கேள்வி எழும்.

எனவே புதிய அரசு அமைக்­கப்­பட்­டாலும் அமைச்­சர்கள் விவ­காரம் சர்ச்­சைக்­கு­ரி­ய­தா­கவே இருக்கும்.

அதே­வேளை, தற்­போ­தைய சிக்­கலைத் தீர்க்க, மாகா­ண­ச­பையைக் கலைத்து தேர்தல் நடத்­தும்­படி ஆளு­ந­ரிடம் முத­ல­மைச்சர் கோரிக்கை விடுக்­கலாம்.

நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னத்தை எதிர்­கொண்­டுள்ள முதல்வர் அவ்­வா­றான கோரிக்­கையை முன்­வைக்கும் போது, ஆளுநர் அதனை எவ்­வாறு அணு­குவார் என்ற பிரச்­சினை உள்­ளது.

தற்­போ­தைய நிலையில், ஆளுநர் மாகா­ண­ச­பையைக் கலைக்கும் முடிவை எடுப்­ப­தற்கு வாய்ப்­புகள் குறைவு.

அது இந்தக் குழப்­பங்­களை கொழும்பு வரை நீட்­டிக்கும் என்­பதால் ஆளு­ந­ரிடம் இருந்து அத்­த­கைய முடிவை எதிர்­பார்க்க முடி­யாது. அவ­ரது முடி­வு­க­ளிலும் அர­சியல் நலன்கள் இருக்கும்

எனவே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் இருந்து மாகா­ண­ச­பையை கலைக்கும் பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டாலும், அது பரி­சீ­ல­னைக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் என்று உறு­தி­யாக கூற முடி­யாது.

வடக்கு மாகாண அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள இந்த நெருக்­க­டிக்கு முழு­மை­யான தீர்வு ஏதும் கிடைப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தற்­போது வரை தென்­ப­ட­வில்லை.

அடுத்து நடக்கும் நிகழ்வு அல்­லது அடுத்து எடுக்­கப்­படும் முடி­வுகள் எத்­த­கை­ய­தாக இருந்­தாலும், அவையும் தொடர்ந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதிகம். அதா­வது தொடர் விளை­வு­களை ஏற்­ப­டுத்தும்.

தமக்கு கட்சி முக்­கி­ய­மல்ல ஆட்­சியே முக்­கியம் என்று முத­ல­மைச்சர் கூறி­யி­ருக்­கிறார். அவர் ஆட்சி என்று கூறி­யி­ருப்­பது, அதி­கா­ரத்தை அல்ல மக்­க­ளுக்­கான ஆட்­சி­யையே.

இருந்­தாலும், ஆட்­சியைத் திற­மை­யாக நடத்­து­வ­தற்கு கட்­சியும் முக்­கி­ய­மா­னது. அவர் இப்­போது எதிர்­கொள்­கின்ற நெருக்­க­டி­க­ளுக்கு இது தான் காரணம்.

அர­சியல் என்று வந்து விட்ட நிலை­யிலும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், தன்­னையும் சற்று மாற்றிக் கொள்ள முனைந்­தி­ருக்க வேண்டும்.

நீதி­ய­ர­ச­ராக தனது திற­மை­களின் மூலம் மாறி­யி­ருக்­கலாம். ஆனால் ஒரு கட்­சியின் மூலம் தான் அவர் அர­சியல் தலை­வ­ரானார். எனவே கட்­சியைப் புறக்­க­ணித்து ஆட்­சியை நடத்­துவேன் என்­பது, ஜன­நா­யக அர­சி­ய­லுக்கு பொருத்­த­மற்­றது.

எளிதில் எவ­ராலும் அணு­கப்­பட முடி­யா­தவர் என்ற நிலை நீடிப்­பது அவ­ரது பெரும் பலவீனம்.

அவ­ருக்கு ஆத­ர­வாக கையெ­ழுத்­திட்ட மாகா­ண­சபை உறுப்­பினர் அனந்தி கூட, மக்களின் பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறு­வ­தற்கு முத­ல­மைச்­சரை சந்­திக்க முடி­ய­வில்லை, அமைச்­சர்­க­ளுடன் தொலை­பே­சியில் கூட பேச முடி­ய­வில்லை என்று குற்­றம்­சாட்­டி­யவர் தான்.

ஆளும்­கட்சி மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுடன் கூட நெருக்­க­மான தொடர்­பு­களை பேண முடி­யா­த­வ­ராக இருப்­பது முத­ல­மைச்­சரின் பல­வீனம். இது­போன்ற பல­வீ­னங்­களைத் தாண்டி வெளியே வராமல், முத­ல­மைச்­சரால் கட்­சிக்கு அப்­பாற்­பட்ட அர­சி­யலை அவ்­வ­ளவு இல­கு­வாக முன்­னெ­டுத்து விட முடி­யாது.

இந்தப் பாடத்தை முத­ல­மைச்சர் இப்­போ­தா­வது கற்றுக் கொள்ள வேண்டும்.

சரி- தவறுகளுக்கு அப்பால், இந்த விவகாரம் இப்போது, மக்களை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற ஒரு அரசாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு மாகாணசபைக்கு, இது ஒரு சோதனைக்காலம்.

தமது பிடிச்சிராவித்தனங்களுக்காக வடக்கு மாகாண நிர்வாகத்தைப் பலிகொடுப்பதற்கு எல்லாத் தரப்பினரும் தயாராக இருக்கிறார்கள்.

வடக்கு மாகாணசபையில், கடந்த புதன்கிழமை நடந்த சிறப்பு அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றிக் கொண்டிருந்த போது, தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர், பசுபதிப்பிள்ளை,

நந்தவனத்தில் ஓர் ஆண்டி,

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதை

கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

என்ற பாடல் வரிகளை கூறி விட்டு, வெளியே போனார், அவர் நந்தவனத்து ஆண்டியாக குறிப்பிட்டது நிச்சயமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனைத் தான் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், போட்டுடைத்த நந்தவனத்து ஆண்டி ஒருவரல்ல, பல ஆண்டிகள் சேர்ந்தே வடக்கு மாகாணசபையின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என.கண்ணன்-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.