அமெரிக்க கடற்படையினர் 7 பேர் ஜப்பான் கடலில் மாயம்

0
641

 

ஜப்பான் கடலில் சரக்கு கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி விபத்துக் குள்ளானதில் 7 கடற்படை வீரர்கள் மாயமாகினர்.

ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. அது மிகவும் அதி நவீன தொழில் நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.

இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே வந்த ஏசிஎஸ் கிரில்டல் என்ற சரக்கு கப்பலுடன் மோதியது.

அதில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது. ஏனெனில் சரக்கு கப்பல் இதைவிட அதிக எடையுடன் இருந்தது. ஏனெனில் அதில் 30 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்தது.

கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 வீரர்கள் மாயமாகிவிட்டனர். அவர்களின் நிலைமை என்ன வென்று தெரியவில்லை. இதற்கிடையே காயம் அடைந்த கமாண்டர் மற்றும் 2 பேர் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.