சம்பந்தனின் தூதுவராக முதலமைச்சரை சந்திக்கச்சென்று வாங்கிக்கட்டிய சிறிதரன் – (வீடியோ இணைப்பு)

0
2036

கிளிநொச்சியில் இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் சமாதான தூதுவராக முதலமைச்சரிடம் இன்று சென்றபோது நன்றாக நன்றாக வாங்கிக்கட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் இன்று கதவடைப்பு போராட்டம் நடைபெற்றபோது ஒலிபெருக்கி பூட்டப்பட்ட வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்த சிறிதரன் கடைகளை திறக்குமாறு வர்த்தகர்களை வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில், டெனிஸ்வரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகிய அமைச்சர்கள் விடயத்தில் முதலமைச்சர் விட்டுக்கொடுத்து செயற்பட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கைவிட முடியும் என்ற சம்பந்தனின் செய்தியுடன் முதலமைச்சரை சந்திப்பதற்கு சிறிதரன் சென்றிருக்கிறார்.

அவரை சந்தித்த முதலமைச்சர் கிளிநொச்சியில் நீர் தானே ‘கிளிநொச்சியில் கதவடைப்பு போராட்டத்துக்கு எதிராக செயற்பட்டிருக்கிறீராமே ‘ என்று முகத்துக்கு நேராக சிறிதரனிடம் முதலமைச்சர் கேட்டுள்ளார்.

அத்துடன், சிறிதரனின் கோரிக்கைக்கும் இறுக்கமான பதிலையே முதலமைச்சர் வழங்கியதாக அறியமுடிகிறது.

……………………………………………………….

சிறிதரன் என்னமா நடிக்கிறார்!!

விலாங்கு மீன்போன்று.. “ஒரு சமயம் முதல்வருக்கு சார்பாக கதைசொல்லுவாரு…. இன்னொரு சமயம் முதலமைச்சருக்கு எதிராக (தமிழரசுகட்சி தலைமைகள் சார்பாக) நடப்பாரு…

சிறிதரன் முதலமைச்சருக்கு சார்பாக என்னமா பேசுகிறார் பாருங்கள் காணொளியை!!!

விலாங்கு மீன் என்ன செய்யும் தெரியுமா??

eelஇது ஒரு நீளமான மெல்லிய மீன் வகை… தலை பாம்பைப்போன்றும் வால் மீனைப்போன்றும் இருக்கும்… இதன் எதிரிகள் இதைவிட பெரிய மீன்களும் பாம்புகளுமாகும்… ஆகவே பாம்புகளால் ஆபத்து ஏற்படுமானால் தானும் பாம்பினமே என்று தலையைக் காட்டியும், மீன்களால் ஆபத்து ஏற்படுங்கால் தானும் மீனினமே என்று வாலைக் காட்டியும் தப்பித்துக்கொள்ளுமாம்..

cv_sere-735x400
இவ்வாறே மனிதர்களிலும் சிலர் கபடமாக இரு சாரார்/தரப்பு மக்களோடும் இணைவாக இருந்துகொண்டு அவர்களுடைய கொள்கைகள், காரியங்களை, தமக்கு விருப்பமில்லாதபோதும், சுயநலத்தோடு ஆதரித்துக்கொண்டிருப்பார்கள். இத்தகைய மனிதரை ‘விலாங்கு மனிதன்’ என்று அழைப்பர்…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.