மறைந்த இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம்

0
656

இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானாவின் ஷுக்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. இதுதவிர அவரது குறிப்புகளும் அதிக தொகைக்கு ஏலம் போனது.

இங்கிலாந்தின் மறைந்த இளவரசி டயானா இளவரசர் சார்லசை திருமணம் செய்யும் முன்பு நர்சரி பள்ளி ஆசிரியை ஆக இருந்தார்.

அப்போது அவர் தனது 19-வது வயதில் அணிந்திருந்த வெள்ளை நிற ‘ஷு’க்கள் இங்கிலாந்தில் உள்ள டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அவை ரூ.1ž.5 லட்சத்துக்கு ஏலம் போனது.

 201706161619380657_Diana-Shoes._L_styvpf.gif

அந்த ஷுக்கள், 1977-78 காலகட்டத்தில் டயானா தனது நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுச் சென்றவை ஆகும்.

நர்சரி பள்ளி ஆசிரியையாக பணியாற்றியபோது டயானா அந்த ஷூக்களை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் இருப்பதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர கென்சிங்டன் அரண்மனை குறிப்பேட்டில், தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவம் தொடர்பாக இளவரசி டயானா எழுதிய குறிப்பும் ஏலம் விடப்பட்டன. இந்த குறிப்பு 1400 பவுண்டுகளுக்கு (ரூ.1.15 லட்சம்) ஏலம் போனது.

இளவரசர் சார்லஸ், டயானாவை பிரிந்த 2 நாள் கழித்து எழுதிய கடிங்களும் ஏலம் விடப்பட்டன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.