மாட்டிறைச்சி கேட்டதால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

0
611

உத்தரப் பிரதேசத்தில் திருமண விருந்தில் மாட்டிறைச்சியை மணமகன் வீட்டார் நிர்பந்தித்ததால் மணமகளின் பெற்றோர் திருமணத்தை நிறுத்திவிட்டு போலீசில் புகார் அளித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண விருந்தில் மணமகனின் வீட்டார் மாட்டிறைச்சியை கட்டாயப்படுத்தியதால், பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்தனர்.

ராம்பூரில் நடந்த திருமண நிகழ்ச்சியின் போது, மணமகனின் குடும்பத்தார் அவர்களது உறவினர்களுக்கு மாட்டிறைச்சியை தயார் செய்ய வேண்டும் அல்லது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தணைகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், திருமணத்தை நிறுத்திவிட்டு மணமகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக மணமகனுக்கு கார் வாங்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை மணமகள் வீட்டார் மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தரியாகார்க் கிராமத்தில் உள்ள போட் காவல் நிலையத்தில் மணமகளின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதில் மணமகன் வீட்டார் மற்றும் மேலும் சிலர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், மணமகன் வீட்டாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை அதிகாரி பட்வாய் எஸ்.எச்.ஓ. ராஜேஷ் குமார் திவாரி கூறினார்.

கடந்த மாதம் தான் மத்திய அரசு சட்டவிரோத மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.