மனுவை வாபஸ் பெறாவிட்டால் பொலிசாரையும், இராணுவத்தையும் அழைக்க வேண்டிவரும்!! – பயமுறுத்தும் முதலமைச்சர்!!- (வீடியோ)

0
153

எனக்கு எதிராக கொடுக்கபட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மனுவை வாபஸ் பெற்றால் மக்களை நான் சாந்தப்படுத்துவேன். அல்லாவிட்டால்  பொலிசாரையும், இராணுவத்தையும்  அழைக்கவேண்டி வரும் என  பயமுறுத்தும் தொனியில்  முதலமைச்சர்  விக்னேஸ்வரன்  பேசியுள்ளார்.  (பதவியாசை யாரைதான்  விட்டது??)

“என்ன காரணம் கொண்டும்  முதலமைச்சர் பதவியில் இருந்து  சி. வி. விக்னேஸ்வரன் இறங்கமாட்டார் போல்தான் தெரிகின்றது. ஒருவேளை தான் பதவியிலிருந்து இறங்குகின்ற  நிலைவந்தால், ஏதாவது காரணங்களை காட்டி இராணுவத்தை அழைத்து  வடமாகாணசபை நிர்வாகத்தை  ஆளுனரின் (அரசாங்கத்தின்) கையில் ஒப்படைத்துவிட்டுதான்  ஒதுங்குவார் போல் தெரிகின்றது.

• வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என சதாகாலமும்  குரல்கொடுக்கும் முதலமைச்சர். தனது பதவிக்கு ஆபத்து வரப்போகிறது  என்று தெரிந்தவுடன்  இராணுவத்தை  அழைக்க வேண்டிவரும் எனக்கூறுகிறார்.

• மக்களால்  தெரிவு செய்யப்பட்ட பெரும்பாண்மையைான வடமாகாணசபை உறுப்பினர்கள்  முதலமைச்சரை விரும்பவில்லையென்றால், அவர்களை வைத்துக்கொண்டு எப்படி  வடமாகான சபையை ஆட்சிசெய்யமுடியும்??

• வடமான சபையில் உள்ள ஐந்து அமைச்சர்களில் 4 அமைச்சர்கள்  குற்றவாளிகள் என்றால்?? அவர்களை வழிநடத்தும் முதலமைச்சர் தார்மீக ரீதியாக  தனது பதவியை  இராஜினமா  செய்திருக்கவேண்டும்.

கறுத்த ஆடுகள் யார்??

இந்தப் பிரச்சனையை  பூதாகரமாக்கி  குளிர்காய நினைக்கும் தரப்புக்கள் (அனந்தி தலைமையிலான குழு, குமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான குழு, புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக   இயங்கும் குழுக்கள்…) மக்களை  தூண்டிவிட்டு  தங்களின்  அரசியல்  அபிலாசைகளை  நிறைவேற்ற  முனைகிறார்கள் என்பது  வெட்டவெளிச்சமாக தெரிகின்றது.

பல்வேறு தரப்பினர்களிடையே இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் உள்குத்து சண்டையானது தமிழர்களின்  நலன் சார்ந்த போராட்டமல்ல.

ஒட்டுமொத்தமாக  பார்த்தோமானால்..கிடைத்த   பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும்,  பதவிகள்  கிடைக்காதவர்கள்  பதவிகளை பெற்றுக்கொள்வதற்குமாக   நடக்கும்   போராட்டமேயொழிய  வேறொன்றுமில்லை.
Premanantha-birthday60004பிரேமானந்தா  குற்றவாளியா??  சுத்தவாளியா??  மாபெரும் கிரிமினல்  குற்றவாளியை கடவுளாக வணக்கும்  ஒரு நீதிபதியை உலகத்தில் எங்குமே பார்திருக்கமுடியாது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.