எனக்கு அது பிடிக்காது!

0
186

ஸ்டார் என்ற வார்த்தை தனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.

ஸ்ருதி ஹாஸன் கையில் சபாஷ் நாயுடு படம் மட்டுமே உள்ளது. சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதி வெளியேறிவிட்டார். முழுமையான திரைக்கதையை அளிக்கவில்லை என்று காரணம் கூறியுள்ளார்.

இந்நிலையில் சினிமா குறித்து அவர் கூறியதாவது, எனக்கு ஸ்டார் என்ற வார்த்தை பிடிக்காது.

அந்த வார்த்தையோடு நிறைய பிரஷரும் சேர்ந்து வருகிறது. நான் விரும்புவதை செய்வதற்கு நல்ல சம்பளம் பெறுபவராக என்னை கருதுகிறேன்.(தனுஷுக்கு ஸ்டார் என்று அழைப்பது பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டேன். என் வாழ்வில் பல சங்கடங்களை கடவுளின் அருளால் கடந்து வந்துள்ளேன்.

என் அப்பா கமல் ஹாஸன் தான் என் சூப்பர் மேன். சபாஷ் நாயுடு படத்தில் அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு கிடைத்த கெளரவம்.

அவர் என் வேலையில் திருப்தியாக இருப்பது எனக்கு பெருமை. நடிகைகள் பிற நடிகைகளுடன் என்னை ஒப்பிடுவது நடிக்க வந்த புதிதில் கஷ்டமாக இருந்தது.

ஆனால் தற்போது எனக்கு அதை பற்றி கவலை இல்லை. அனைவரும் ஒன்று போன்று இருக்க முடியாது என்கிறார் ஸ்ருதி.

சாதனை படைத்த விவேகம் பாடல்!

59156207அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திரைப்படம் விவேகம். வேதாளம் படத்தையடுத்து சிவாவோடு அஜித் இணைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் பல சாதனைகளை படைத்தது.

இதனையடுத்து இன்று 12 மணிக்கு இப்படத்தின் Surviva என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 இலட்சம் Views பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் Viewsகளையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது.

டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். Surviva Single Track முழு பாடல் வரும் 19ம் தேதி வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.