இரட்டை இலைச் சின்னத்தை இடம்பெறச் செய்தவர் யார்?

0
792

1972 எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும்  அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு தி.மு.க.வில் இருந்து  பிரிந்த  எம்.ஜி.ஆர் அந்த ஆண்டுதான் அண்ணா தி.மு.க வைத் தொடங்கினார்.   கட்சி ஆரம்பித்து  சில மாதங்களில்  திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி  இடைத் தேர்தல் வந்தது.

1972 எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும்  அ.தி.மு.க தொண்டர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு தி.மு.க.வில் இருந்து  பிரிந்த  எம்.ஜி.ஆர் அந்த ஆண்டுதான் அண்ணா தி.மு.க வைத் தொடங்கினார்.   கட்சி ஆரம்பித்து  சில மாதங்களில்  திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி  இடைத் தேர்தல் வந்தது.

தி.மு.க அப்போது மிகப்பலத்தோடு  ஆளுங்கட்சியாக இருந்தது.  ஆனால்  அசராமல்  மன உறுதியோடு   இடைத் தேர்தலைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். அவர் அ.தி.மு.க சார்பாக அறிவித்த வேட்பாளர் தான் மாயத்தேவர்.

1973 மே மாதம் வெளியான இடைத்தேர்தல்  முடிவுகளைப் பார்த்து தி.மு.க அதிர்ந்து போனது.  இரண்டு லட்சத்து அறுபதாயிரம் வாக்குகள் பெற்று மாயத்தேவர்  வெற்றி பெற்றிருந்தார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ்  இரண்டாம் இடத்தைப் பெற தி.மு.க  மூன்றாம் இடத்துக்குத்   தள்ளப்பட்டது. ஆரம்பித்து  ஐந்து ஆண்டுகளில் தமிழ்  நாட்டில் ஆட்சியைப் பிடிக்க அ.தி.மு. விற்கு இந்த இடைத்தேர்தல் பெரும் காரணமாக அமைந்தது.

எம்.ஜி.ஆரோடு  நெருக்கமாக இருந்த மாயத்தேவர் சில ஆண்டுகளில் தி.மு.க.விற்குப் போய் எம்.பி ஆனார். மீண்டும் அ.தி.மு.க வந்த அவர் எம்.ஜி. ஆர் மறைவுக்குப்  பிறகு அரசியலை   விட்டு ஒதுங்கியிருந்தார்.  தொடர்ந்து வழக்கறிஞராகப் பணியைத் தொடர்ந்த மாயத்தேவர் திடீரென்று தே.மு.தி.க .வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசியில் அங்கிருந்தும் வெளி யேறிவிட்டார்.

இந்நிலையில் அவர்  மீண்டும் அ.தி.மு.க பக்கம் வரப்போவதாக பேச்சுக்கள் எழவே அவரைச் சந்தித்தோம்.

அரசியலை விட்டே ஒதுங்கியிருந்த நீங்கள் திடீரென தே.மு.தி.க.வில் இணைய என்ன காரணம்?

எம்.ஜி.ஆர்.இல்லாத இடத்தை விஜயகாந்த் நிரப்புவார் என்று நம்பித்தான் அவர் பின்னால் போனேன். ஆனால் போன பிறகு தான்  அவர் ‘கறுப்பு எம்.ஜி.ஆரும் இல்லை  ஆரஞ்சு எம்.ஜி ஆரும் இல்லை எனத் தெரிந்தது.’

எம்.ஜி.ஆர் ஒரு போதும்  தன் குடும்பத்திற்குக்   கட்சிப் பதவியை வழங்கியதில்லை. ஆனால்  தே.மு.தி.களில் மனைவி  மச்சினன்   என குடும்பத்தினர் தான் கட்சியை ஆட்டுவிக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்.கட்சித் தொண்டர்களை உயிரளவுக்கு மதிப்பார். ஆனால் விஜயகாந்தோ தொண்டர்களை நடத்துவதைப் பார்த்து மிகவும் வருந்தினேன். எம்.ஜி.ஆரையும் இவரையும் ஒப்பிட்டுப் பேசுவதே பெரிய தவறு.

மக்கள்  தங்கள்  பிரச்சினையை    சட்டசபையில்   பேசுவதற்  காகத்தான்  எம்.எல்.ஏ.க்களை  தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனால்  இவர்   சட்ட சபைக்கே போகாமல் இருக்கிறார்.  எம்.ஜி.ஆர். என்னிடம் ஒரு பைசா கூட வாங்காமல் எம்.பி. சீட் கொடுத்தார். ஆனால் இவர் பணம் வாங்கிக் கொண்டு தான் சீட்டே தருகிறார். விஜயகாந்த் அழைத்துத்தான் நான் தே.மு.திகவிற்குப் போனேன்.

எம். ஜி.ஆருடன்  இருந்தவர்களை  என் கட்சிக்கு அழைத்து வந்து விட்டேன் எனப் பெருமைப்படுவதற்காக மட் டுமே என்னை அழைத்தார்கள் என்பது பிறகு தான் புரிந்தது. கட்சியில் பதவி தருவதற்கு  என்னிடமே  காசு கேட்கிறார்கள். இவரா கறுப்பு எம்.ஜி.ஆர்? இதெல்லாம் தாங்க முடியாமல் தான் கட்சியில் இருந்து வெளியேறி விட்டேன்.

விஜயகாந்திடம் பதவி இருந்தால் நாடே தாங்காது.

அ.தி.மு.க.வின்  முதல் வேட்பாளர் ஆகுமளவுக்கு எம்.ஜி ஆருடன் உங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டது எப்படி?

1970 களில் தேவர் ஜெயந்தியை சென்னையில் வருடந்தோறும் கொண்டாடுவேன். அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இருந்தேன். அதற்கு நிதி கேட்கப் போகும் போது தான்  எம்.ஜி.ஆர் பழக்கமனார்.  அந்த   நெருக்கம்   தான்   திண்டுக்கல்லில் சீட்  கிடைக்க உதவியது.  அ.தி.மு.க.வின் வெற்றிச்சின்னமான இரட்டை இலையைத் தேர்ந்தெடுத்தது நான் தான்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் கலெக்டர்  ஆபீஸில் பதினாறு சின்னங்களைக் கொடுத்து ஒன்றைத் தேர்வு செய்யச் சொன்னார்கள். நான்  இலைச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்து விட்டு எம்.ஜி. ஆருக்கு போன் செய்தேன்.

அவருக்கு அதில்  திருப்தி இருக்கவில்லை.   வரைவதற்கு  ஈஸியாக   இருக்கும்   இரண்டு விரலை   காண்பித்து வாக்கு கேட்கவும்   ஈஸியாக இருக்கும் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்.

திண்டுக்கல் தேர்தல் பிரசாரத்தில் அவர் இரண்டு விரலைக்  காண்பித்து   ஓட்டுக்  கேட்கவும்  பெண்கள் வாசலில் இரட்டை இலை கோலமெல்லாம் போட ஆரம்பித்தார்கள்.   ஓட்டுப்பதிவு  அன்று  தலையில் இரட்டை  இலையோடு பூ, இரட்டை, இலை ஹேர்பின் என பெண்கள் ஓட்டுப் போட வந்தார்கள். எங்கள் கட்சி சின்னத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து எம்.ஜி.ஆர் ஆச்சரியப்பட்டார்.

மீண்டும் அ.தி.மு.கவில் சேரப் போவதாக பேச்சிருக்கிறதே?

உரிய மரியாதை கிடைத்தால் கட்டாயம் போவேன்.

தகவல்: அரவிந்ன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.