இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி (நேரடி ஒளிபரப்பு)

0
326

இந்தியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

இந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி வங்காள தேசத்தின் தமீம் இக்பால், சவுமியா சர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார்.

முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

அடுத்து சபிர் ரஹ்மான் களம் இறங்கினார். அவர் களம் இறங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடினார். தமீம் இக்பால் நிதானத்தை கடைபிடித்தார்.

 வங்காள தேசம் 6.5 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடிய சபிர் ரஹ்மான் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். 9-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார்.

இந்த ஓவரில் முஸ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்டினார். முதல் 10 ஓவரில் வங்காள தேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தமீம் இக்பால் 30 பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்தார்.

13-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் தமீம் இக்பால் க்ளீன் போல்டானார்.

ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டதால் தமீம் இக்பால் அவுட்டில் இருந்து தப்பினார். 18 ரன்னில் இருக்கும்போது கண்டத்தில் இருந்து தப்பிய தமீம் இக்பால் அதன்பின் அடிரடியாக விளையாட ஆரம்பித்தார்.

இவரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் 18.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி தமீம் இக்பால் அரைசதம் அடித்தார்.

முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு பந்து எடுபடாததால் கேதர் ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.