2வது மாடியிலிருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை – சிசிடிவி காணொளி!

0
644

ஹைதராபாத்தின் பஹதூர்புரா பகுதியில் 2வது மாடியிலிருந்து 18 மாத பெண் குழந்தை தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை நேரத்தில் நடைபெற்ற இந்த கோரச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் குழந்தையை, அருகே இருந்த வீட்டில் வசித்தவர்கள் உடனடியாக மீட்டனர்.

குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்ததை அறியாத பெற்றோருக்கு தகவல் தெரிவித்த அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர்.

பெண் குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் சரியாக கவனிக்காததால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் குழந்தை 2வது மாடியிலிருந்து கீழே விழுந்த காட்சி கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 காணொளி… ( இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதை தவிர்க்கவும்)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.