ஆண்களே ! பொது போக்குவரத்துகளில் கால்களை விரிக்காதீர்கள்.

0
149

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில், பொதுப் போக்குவரத்துகளில் சக பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமிப்பது போல், ஆண்கள் காலை பரப்பிக் கொண்டு அமருவதற்கு எதிராக, போக்குவரத்து அதிகாரிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஸ்பெயினின் பேருந்து கழகமான ஈஎம்டி நிறுவனம், இருக்கையில் ஆண் ஒருவர் தனது காலைப் பரப்பி கொண்டு அமர்ந்திருப்பது போலவும், அதற்கு பக்கத்தில் சிவப்பு நிற `பெருக்கல் (X)` குறி இருப்பது போலவும் ஒரு புகைப்படத்தைப் பிரசுரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இதே பிரசாரத்தை மெட்ரோ ரயிலுக்குள்ளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 96436528__96432328_emtmanspreading

இந்த பிரசாரம், இணையத்தில் பெண்கள் குழுவொன்றால் தொடங்கப்பட்டது; அதில் 12 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர்.

இவ்வாறு காலை பரப்பி கொண்டு அமர்வதற்கு `மேன்ஸ்பிரடிங்` என ஆங்கிலத்தில் சொல் உண்டு; அது ஆக்ஸ்ஃபோட் அகராதியில் 2015ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

மேலும் இவ்வாறு அமர்வதற்கு, ஏற்கனவே உலகமுழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்பானிஷ் மொழியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்பெயின் போக்குவரத்து கழகம், இந்த பிரசாரம் “பொது இடங்களில் ஆண் பயணிகள் எவ்வாறு அமர வேண்டும் என்பதையும், பிற பயணிகளுக்கு சரியான இடம் கொடுக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரத்தை தொடங்கிய பெண்கள் அமைப்பினர், தனது இணையதள அறிக்கையில், “பொதுவாக பொது போக்குவரத்துகளில் பெண்கள் கால்களை ஒடுக்கிக் கொண்டு அமர்வதை நீங்கள் காண முடியும் அதற்கு காரணம் அவருக்கு அருகில் ஒரு ஆண் தனது கால்களை பரப்பி கொண்டு அமர்ந்திருப்பார்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு சமூக ஊடகங்களில் #மேன்ஸ்பிரடிங் இல்லாத மேட்ரீட்(madrid without manspreading) என்ற ஹேஷ் டாக் பகிரப்பட்டு வருகிறது.

2014ஆம் ஆண்டு நியூயார்க்கின் பெருநகர போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் இந்த மேன்ஸ்பிரடிங்கை ஒடுக்க, நகரின் மெட்ரோக்களில் “டூட் ஸ்டாப் தி ஸ்பிரடிங்” (நண்பா கால்களை பரப்பி கொண்டு அமர்வதை நிறுத்து) என்ற வாசகத்தை பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதை போன்று அமெரிக்க நகரான ஃபிலடெல்ஃபியாவில், “டூட் இட்ஸ் ரூட்” (நண்பா இது முரட்டுத்தனமானது) என்ற வாக்கியத்தை பயன்படுத்தி மேன்ஸ்பிரடிங்கிற்கு எதிராக பிரசாரம் செய்தனர்.

மேலும் அமெரிக்காவின் சியாட்டல் நகரில், ஆக்டோபஸ் அதன் கால்களை சீட்டின் ஓரப்புறங்களில் பரப்பியிருப்பது போன்ற புகைப்படங்களை கொண்டு மேஸ்பிரடிங்கிற்கு எதிரான பிரசாரத்தை நடத்தினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.