சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனை தட்டிச்சென்றார் 20 வயதேயான இளம் மங்கை

0
111

பிரெஞ்ச் ஓபனில் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்-ஐ வீழ்த்தி இளம் வயதில் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார் ஜெலீனா ஆஸ்டாபென்கோ.

கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரூமேனியா)- லத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.

ஆஸ்டோபென்கோ இந்த தொடருக்கான தரவரிசை பெறாத வீராங்கனை. இதனால் ஹெலெப் எளிதாக வென்று பிரெஞ்ச் ஒபனை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

முதல் செட்டை ஹாலெப் 6-4 என எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் ஆஸ்டோபென்கோ ஹாலெப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் 2-வது செட்டை 6-4 எனக் கைபற்றினார்.

201706102131312446_French1-s._L_styvpf.gif20 வயது இளம் மங்கை ஜெலீனா ஆஸ்டாபென்கோ

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் கடுமையான இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்டோபென் கோ 6-3 என எளிதில் அந்த செட்டைக் கைப்பற்றி ஹாலெப்பை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் மிகவும் இளம் வயதில் (20 வயது) 1997-ற்குப் பிறகு பிரெஞ்ச் ஓபனை வென்ற முதல் வீராங்கனை மற்றும் 2006-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

201706102131312446_halep-s._L_styvpf.gif2-ம் இடம் பிடித்த ஹாலெப்

கடைசியாக 1983-ம் ஆண்டு தரவரிசை பெறாத ஒரு வீராங்கனை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். தற்போது ஆஸ்டோபென்கோ முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.