நவயுக திரௌபதி! 5 சகோதரர்களை திருமணம் செய்து கொண்ட ஒரே பெண்!

0
509

முத்தலாக் பிரச்சனை உலகம் எங்கும் வெடித்து கொண்டிருக்கும் போது. இந்தியாவில் ஒரே பெண் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்ட பழைய செய்தி ஒன்று டிரென்ட் ஆகிவருகிறது.

ஆம், ராஜோ என்பவர் தான் அந்த பெண். இவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சகோதரர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்…

06-1496745838-1

டேராடூன்!

ராஜோ எனும் இந்த பெண் டேராடூன்-ல் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஐந்து சகோதரர்களை திருமணம் செய்துள்ளார். இவர்களுடன் தான் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார் ராஜோ.

06-1496745854-2

குடும்ப பாரம்பரியம்!

இவர்களது குடும்பத்தை பொறுத்தவரை இது இவர்களது குடும்பம் பழக்கம் எனவும் இதை பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை எதிர்காலத்திலும் கடைபிடிப்போம் என தெரிவிக்கின்றனர்.
06-1496745874-3

மகாபாரதம்!

இந்த பாரம்பரிய வழக்கம் மகாபாரதத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. மகாபாரதத்தில் திரௌபதி பாண்டவர்களை திருமணம் செய்திருப்பார். இப்போது ராஜோ நவயுக திரௌபதியாக வாழ்ந்து வருகிறார்.

06-1496745890-4

சடங்கு!
மேலும், இந்த சகோதரத்துவ பலதாரமண வழக்கத்திற்கு அந்த கிராமத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் பெண்கள் வசித்து வருவதே காரணம் எனவும் கூறப்படுகிறது.

06-1496745902-5

ஒரு குழந்தை!
ராஜோவிற்கு ஒரு குழந்தை இருக்கிறார். இவர்களது குடும்பத்திலேயே யார் அந்த குழந்தைக்கு தந்தை என தெரியாதாம். ராஜோ அனைத்து சகோதரர் உடனும் தாம்பத்தியத்தில் ஈடுப்படுகிறார்.
06-1496745912-6

குட்டு வர்மா…

இவர் முதலில் குட்டு வர்மா என்பவரை தான் திருமணம் செய்துக் கொண்டார். பிறகு அவரது இளைய மற்றும் மூத்த சகோதரர்களான பஜ்ஜூ வர்மா, சாந்த் வர்மா, கோபால் வர்மா மற்றும் தினேஷ் வர்மாவை திருமணம் செய்துக் கொண்டார்.

06-1496745854-2ராஜோவின் அம்மா…

ராஜோவை போலவே, அவரது தாயும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.