ஐ.பி.எல்: புனே அணி்க்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி

0
272

ஐ.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் புனே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னில் வெளியேற, டெல்லி அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

201705130019335631_sugmjuud._L_styvpf3-வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.

ரிஷப் பந்த் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த சாமுவேல்ஸ் 27 ரன்கள் சேர்த்தார். கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ரன்கள் அடித்து 19-வது ஓவரில் அவுட்டாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பேட்டிங் செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களான ரகானே டக் அவுட்டாக, திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழக்க பின் களமிறங்கிய சுமித் 38 ரன்களை சேர்த்தார், இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி 60 ரன்களை குவித்தார்.

201705130019335631_o6y9jkz2._L_styvpfஒருபக்கம் விக்கெட்கள் சரிந்த நிலையில் புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்களை மட்டும் குவித்து தோல்வியை தழுவியது. டெல்லி அணி சார்பில் ஜாகீர்கான், மொகமது ஷமி தலா இரண்டு விக்கெட்களையும், நதீம் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.