ஐ.பி.எல்: ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மும்பை அணியை வீழ்த்தியது

0
222

ஐ.பி.எல் இன்றைய போட்டியில் மோதிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல். தொடரில் இன்று 48-வது ஆட்டம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சிம்மன்ஸ் 1 ரன் எடுத்த நிலையில் மொகமது நபி பந்தில் ஆட்டம் இழந்தார். பார்தீவ் பட்டேல் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

3-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாட, மற்ற வீரர்களான ஹர்திக் பாண்டியா (15), பொல்லார்டு (5), கரண் சர்மா (5) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ரோகித் சர்மா 67 ரன்கள் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் கவுல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 140 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

201705082331094614_henriques._L_styvpfசன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் டி.ஏ. வாரனர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் மற்றும் தவான் நிதானமாக விளையாடு ரன்களை சேர்த்தனர்.

ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ரன்களையும், ஹென்ரிக்ஸ் 44 ரன்களையும் குவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.