யாழ்.பல்கலை போராட்டம்; மாணவர்கள் இருவரின் உடல் நிலையில் மோசம்

0
808

 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள 13 மாணவர்களையும் மீள அனுமதிக்குமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களில் இருவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்காத நிலையில் குறிப்பிட்ட 13 மாணவர்களும் நேற்று(30) முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

இவர்களில் இருவர் நேற்று(31) காலை மிகவும் பலவீனமடைந்து காணப்பட்டதைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக மருத்துவ அதிகாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களைப் பரிசோதித்துள்ளார்.

இதன் போது இரண்டு மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ள விரிவுரையாளர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் எனினும் மாணவர்களுக்குச் சாதகமான பதில் வழங்கப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற புது முக மாணவர் வரவேற்பு நிகழ்வில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 13 பேருக்கு காலவரையறையின்றி வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த 11 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இம்மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை.

நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து கலைப்பீட மாணவர்கள் பல்வேறு கண்டன நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி காலை கலைப்பீட மாணவர்கள் அமைதியான முறையில் நிர்வாகக் கட்டடத் தொகுதியின் முன் அமர்ந்து பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.