வெளிநாட்டு ஆசையில் பணத்தை இழந்த வர்த்தகர் துாக்கில் தொங்கி தற்கொலை!!

0
1382

திருநெல்வேலி சந்தியில் கடையில் துாக்கில் தொங்கி மரணமான 34 வயதான சுந்தரலிங்கம் விஜதன் வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றில் லட்சக்கணக்கான காசு கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாலேயே துாக்கில் தொங்கி மரணமனதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் திருநெல்வேலி சந்தை பகுதியில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்று ள்ளது.

இச்சம்பவத்தில் நாமகள் வீதி கொக்குவிலை சேர்ந்த சுந்தரலிங்கம் பிரிந்தன் (வயது -34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி பலரசரக்கு கடையை குறித்த இளைஞரும், அவரது தந்தையாரும் சேர்ந்து நடத்தி வந்த நிலையில், தகப்பனார் உயிரிழந்ததை தொடர்ந்து குறித்த இளைஞரே கடையை தனியாக பொறுப்பெடுத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வழமை போன்று கடையை காலை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

காலை 9.45 மணியளவில் அருகில் உள்ள புடைவை கடையொன்றில் ஆயிரம் ரூபாய் கொடுத்து போர்வை ஒன்றை வாங்கியுள்ளார்.

பின்னர் பன்னிரண்டு மணியளவில் குறித்த இளைஞருடைய சகோதரி கடைக்கு வந்து சாப்பாடு கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதன்பிறகே பிற்பகல் இரண்டு மணியளவில் கடைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட நிலையில், மரணம் தொடர்பில் யாழ்.நல்லூர் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமார் உதயசிறி விசாரணைகளை மேற்கொண்டார்.

எனினும் மரணத்துக்கான காரணம் குறித்து குடும்பத்தினரிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை என்ற போதிலும் திடீர் மரண விசாரணை அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணையை அடுத்து, குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக ஏஜென்சியிடம் பெருமளவு பணத்தை வழங்கியுள்ளார் என்றும், அதனால் இருவருக்கும் இடையில் தகராறும் இறுதியாக கைகலப்பும் நடைபெற்றது எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் பிரஸ்தாப வர்த்தகர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

8196-2-174a7b4e62e9f71d3a93c7263daeecaf

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.