மூவரை கொன்றவருக்கு விச ஊசி தண்டனை

0
1765

தாயை ஒருவரை கற்பழித்து கொன்ற பின் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்த நபர் ஒருவருக்கு அமெரிக்காவில் விச ஊசி செலுத்தப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

37 வயதான மார்க் கிரிஸ்டசன் 1998 ஆம் ஆண்டில் சுசான் பிருக் என்பவரையும் அவரது 12 வயது மகள் மற்றும் 9 வயது மகனை கொலை செய்ததற்காகவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

மிசூரியில் கடந்த செவ்வாய்க்கிழமை கிரிஸ்டசன் மீது மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன் கடைசியாக அவர், தனது சகோதரர் மற்றும் மைத்துனிக்கு அன்பை தெரிவித்துக் கொண்டார்.

விச ஊசி செலுத்தப்பட்டு எட்டு நிமிடத்தில் மரணம் நேர்ந்ததாக சீர்திருத்த திணைக்கள பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிஸ்டசன் தனது 18 வயதில் தனது உறவினரான ஜேஸ் காட்டருடன் சேர்ந்து இந்த கொலைகளில் ஈடுட்டுள்ளார். வழக்கு விசாரணையில் கிரிஸ்டசனுக்கு எதிராக சாட்சி சொன்ன காட்டருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

4777feea8a382d7d164123cc985ed5fc

தொடர்புடைய செய்தி…

Mark Christeson, 37, executed over 1998 Missouri triple murder

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.