ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் வித்தியாசமான இரட்டை சகோதரிகள் (வீடியோ, படங்கள்)

0
824

வித்தியாசமான ஆசைகளை கொண்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் தொடர்பான சுவாரஷ்யமான தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசித்து வரும் Lucy மற்றும் Anna DeCinque (30) என்ற இரட்டை சகோதரிகளே இவ்வாறு தங்களுடைய வினோதமான வாழ்க்கை முறை தொடர்பில் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த இரட்டை சகோதரிகள் தங்களுடைய படுக்கை மற்றும் ஆண் நண்பரை கூட இருவருமாக பங்கு போடுவதாக தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றெடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு இருவருமாக சேர்ந்து வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இருவரும் தங்களின் அழகிற்காக உதடு, செயற்கை புருவங்கள், மார்பகம் போன்றவற்றை அழகுபடுத்துவதற்கு மாத்திரம் $250,000 டொலர்களை ஒரு வருடத்திற்கு செலவிடுகின்றனர்.

இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக, ஒருவர் சில மீற்றர் தூரம் நடந்துசென்றால், அதே அளவு தூரம் தானும் நடந்து செல்வதாக, ஒரு சகோதரி கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி ஒருவர் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டால் அதே உணவை அதே அளவு மற்றைய சகோதரியும் சா்ப்பிடுவதாக கூறியுள்ளனர்.

இருவரினதும் தற்போதைய ஆசை, நாங்கள் இருவரும் ஒரே தடவையில் கர்ப்பம் தரிக்க ஆசைப்பட்டுள்ளோம் என்றும் ஏனெனில் குழந்தைகள் என்றால் எங்களுக்கு கொள்ளை பிரியம் என்றும் அவர்கள் இருவரும் தங்கள் பேட்டியின் போது கூறியுள்ளனர்.

1261348955Twin

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.