4 வயது பெண்ணுக்கு, 29 வயது மாப்பிள்ளை – இதயத்தை உருக வைத்த அசாத்தியமான திருமணம்!

0
734

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுமியின் ஆசைக்குட்பட்டு நடந்த ஒரு கலாட்டா திருமணம்.

4 வயது பெண்ணுக்கு, 29 வயது ஆணுடன் கல்யாணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம் தான் இது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்தின் ஆசைக்கு வரம் கொடுத்து அருள்பாலித்திருக்கும் அவர் உண்மையிலேயே நல்ல மனம் படைத்தவர் தான்…

31-1485851526-1fouryearoldgirlhas25yearsolderhusbandஅப்பி சேலேஸ், இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நான்கு வயதேயான குட்டி தேவதை. இவர் அல்பானி மெடிக்கல் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்பி சேலேஸ்-ன் மாமாவுக்கு திருமணமானது. அதை கண்ட அப்பி சேலேஸ்-க்கு தானும் அதை போல திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். தனக்கும் ஒரு காதல் வேண்டும் என அந்த குட்டி தேவதை விரும்பினார்.

அப்பி சேலேஸ்-க்கு அல்பானி மெடிக்கல் சென்டரிலேயே ஒரு காதலரும் இருந்தார். அவர் தான் மேட் ஹிக்ளிங். அவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் குழந்தை செவிலியர்.
தனது நோயாளிகள் மீது அதீத அன்பு செலுத்தும் குணம் கொண்ட ஹிக்ளிங் அப்பி சேலேஸ்-ன் விருப்பதை ஏற்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

31-1485851558-5fouryearoldgirlhas25yearsolderhusband

விளையாட்டு திருமணமாக நடந்தாலும். பார்த்தவர் நெஞ்சை உருக வைத்தது அந்த சம்பவம். மருத்துவமனையிலேயே திருமணம் நடைப்பெற்றது.

31-1485851566-6fouryearoldgirlhas25yearsolderhusband

மிட்டாய் மோதிரங்கள் விரல்களில் ஒருவருக்கு ஒருவர் அணிவித்தனர். கேக் வெட்டி ஊட்டினர். மேட்டை காணும் வரை அப்பி சேலேஸ் அந்த மருத்துவமனையை மிகவும் வெறுத்து வந்தார். மேட தான் தனது கவனிப்பால் அப்பி சேலேஸ்-ஐ அமைதிப்படுத்தினார்.
31-1485851574-7fouryearoldgirlhas25yearsolderhusband

இப்போதெல்லாம் சிகிச்சைக்கு தனது கலாட்டா கல்யாண கணவனை காண்பதற்காகவே ஓடோடி வருகிறார் அப்பி சேலேஸ். இந்த நிகழ்வுக்கு பிறகு குட்டி தேவதை மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.