13 வயது மாணவன் மூலம் கர்ப்பிணியான ஆசிரியைக்கு 10 வருடகால சிறைத் தண்டனை!

0
1780

அமெ­ரிக்­காவில் 13 வயது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்டு கர்ப்­ப­ம­டைந்த குற்­றச்­சாட்டில் முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவதி ஒரு­வ­ருக்கு 10 வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அலெக்­ஸாண்ட்ரா வேரா எனும் இந்த யுவதி, டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­யை­யாகப் பணி­யாற்­றி­யவர்.

21822Alexandria-Vera-1இவர் அப்­ பா­ட­சா­லையின் மாண­வ­னான சிறுவன் ஒரு­வ­னுடன் நீண்­ட­கா­லமாக பாலியல் தொடர்பு வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டார்.

அம் ­மா­ணவன் 13 வய­தா­ன­வ­னாக இருந்­த­போது, அவன் மூலம் அலெக்­ஸாண் ட்ரா வேரா கர்ப்­பி­ணி­யா­ன­தா­கவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ் ­வ­ழக்கில், அலெக்­ஸாண்ட்­ரா­வுக்கு 30 வருட கால சிறைத் ­தண்­டனை விதிக்கப்படு­வ­தற்கு வாய்ப்­பி­ருந்­தது.

எனினும், வழக்கு விசா­ர­ணை­யின்­போது தன் மீதான குற்றச்சாட்டை அலெக்­ஸாண்ட்ரா வேரா ஒப்­புக்­கொண்டார்.

21822Alexandria-Vera3தனது சட்டத்தரணி ரிக்கார்டோ ரொட்ரிக்ஸுடன் அலெக்ஸாண்ட்ரா வேரா

அதே­வேளை, அவர் ஏனைய சிறு­வர்­க­ளுக்கு ஆபத்­தா­ன­வ­ராக இல்லை என்­ப­தையும் நீதி­பதி மைக்கல் மெக்ஸ்­பாடென் ஏற்­றுக்­கொண்டார். எனினும், இவ்­வி­ட­யத்தில் சமூகத்­துக்கு ஒரு தக­வலை தெரி­விக்க வேண்டும் எனக் கூறிய நீதி­பதி, அலெக்ஸாண்ட்ரா வேரா­வுக்கு 10 வருட கால சிறைத்­ தண்­டனை விதித்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீர்ப்­ப­ளித்தார்.

“கல்வி போதிப்­ப­வர்கள் எமது பிள்­ளை­க­ளுக்கு கற்­பிக்க வேண்டும். பிள்­ளைகள் மீது அவர்கள் கைவைக்கக் கூடாது” எனவும் நீதிபதி மைக்கல் மெக்ஸ்பாடென் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.