ஐரோப்பாவில் எச்சரிக்கை : பேசாமல் சுடலாம்!

0
4100

ஐபோன் கையடக்க தொலைபேசி வடிவில் உருவாக்கப்பட்ட கைத்துப்பாக்கி விரைவில் விற்பனைக்கு வரவுள்ள குறித்து, ஐரோப்பா முழுவதும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி துப்பாக்கி தொடர்பில் பிரித்தானிய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
ஸ்மார்ட்போன் வடிவ கைத்துப்பாக்கியை அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தக் கைத்துப்பாக்கி விற்பனைக்கு வருவதற்கு முன்னரே அதனை வாங்க 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த கைத்துப்பாக்கி விரைவிலேயே ஐரோப்பாவில் இறக்குமதி செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

எனவே, ஐரோப்பாவில் பல்வேறு நகரங்களில் கடந்த பல மாதங்களாக பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், ஸ்மார்ட்போன் வடிவ கைத்துப்பாக்கி விற்பனைக்கு வந்தால், பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

இதிலுள்ள ஒரு சிறிய பட்டனை அழுத்தினால், அந்த கைத்துப்பாக்கி விரிந்து துப்பாக்கியாக மாறிவிடும். 9மில்லிமீற்றர் அளவுள்ள தோட்டாக்களை இந்த துப்பாக்கியில் பயன்படுத்தலாம் என்று அதனை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இவ்வாறான கைத்துப்பாக்கிகளை எளிதாக மறைத்து எடுத்து வர முடியும் என்பதால், அது பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.