சிவபெருமானின் மூன்று நிலைகள் தெரியுமா?

0
407

போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு. சிவனின் இந்த மூன்று கோலங்களையும் ஒன்றாக அருள்வதே நடராஜர் திருவுருவம்.
சிவபெருமானின் மூன்று நிலைகள் தெரியுமா?

போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதம் உண்டு. மனைவி, மக்களுடன் வீடு, வாசல் என்று வாழும் வாழ்க்கை ‘போக வாழ்க்கை’ எனப்படும். சிவபெருமானும் கூட இந்த கோலத்தில் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.

தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேக வடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப் போக்குகிறார்.

மிக உயர்ந்த நிலை, ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தி.

இந்த மூன்று கோலங்களையும் ஒன்றாக அருள்வதே நடராஜர் திருவுருவம். அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார்.

இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு. இந்த நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்.

சிதம்பர ரகசியம் தெரியுமா?

201701111446155918_chidambara-ragasiyam-meaning_SECVPF.gifமூன்று வடிவங்களில் சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒரே தலம் தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் கோவில்தான். சிதம்பர ரகசியம் என்றால் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சிவபெருமான் மூன்று வடிவங்களைக் காட்டுகிறார். அவையே அருவம், உருவம், அருவுருவம் என்பனவாகும். இந்த மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒரே தலம் தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் கோவில்தான்.

இங்கு லிங்கரூபமாக இருக்கும் திருமூலநாதர், அருவுருவ வடிவமாவார். நடராஜரின் திருமேனி உருவ வடிவமானது.

சிதம்பர ரகசியமாக இருக்கும் வெட்டவெளி சிவனின் அருவ வடிவமாகும். நடராஜரின் வலது பக்கத்தில் ஒரு சிறிய வாசல் இருக்கிறது.

அந்த வாசல் திரையைக் கொண்டு மூடப்பட்டிருக்கும். பூஜையின் போது அந்தத் திரையை அகற்றி கற்பூர ஆராதனை காட்டுவார்கள்.

அப்போது இறைவனின் திருவுருவம் எதையும் காண முடியாது. ஆகாய ரூபமாக இறைவன் இருப்பதை இவ்வழிபாடு எடுத்துரைக்கிறது.

இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது.

இறைவனும் முதலும் முடிவும் இல்லாதவன். தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ மாலை ஒன்றை மட்டும் அவ்விடத்தில் காணலாம். இதையே சிதம்பர ரகசியம் என்கிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.