பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் நூதன முறை!!

0
344

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நூதன முறை திருப்பூர் மாவட்ட பேருந்து நிலையத்தில் பின்பற்றப்படுகிறது.

திருப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டண கழிப்பறை இருந்தாலும், சிலர் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கின்றனர்.

இதனால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசி, பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் பிரதமரின், “துாய்மை இந்தியா” திட்டத்தில், பேருந்து நிலைய கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்த மாநகராட்சி ஊழியர்கள், பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களுக்கு மைசூர் பா வழங்கி, ‘இனி இத்தகைய செயலில் ஈடுபட கூடாது’ என அறிவுறுத்தினர்.

இதுமட்டுமின்றி புதிய வழியை கையாண்டுள்ளனர். திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களே, இனி அதை சுத்தம் செய்ய வேண்டும். அவர்களுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

அதன் அருகிலேயே டேபிளில் பூ மாலை, துடைப்பம், பக்கெட், தண்ணீர் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.