புதிய அர­சி­ய­ல­மைப்பு நாட்டை பிரித்துவிடுமாம்!! : மஹிந்த இன­வாதக் கூட்டு எதி­ர­ணி­யின் கூக்­குரல்கள்!! (கட்டுரை)

0
636

 

புதிய அர­சியல் யாப்பு சம்­பந்­த­மான இடைக்­கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படவுள்­ளது.

பார­ாளு­மன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலா­கவோ அதற்கு சமாந்தர­மா­கவோ எந்­த­வொரு மையமும் இருக்க முடி­யாது என்­பது உறு­திப்­ப­டுத்­தப்படும் என்­பதே அடிப்படை நிலைப்­பாடு.

இதற்கு முன்­ன­ரான மூன்று அர­சியல் யாப்­பு­க­ளையும் நோக்­கினால், அவை அர­சியல் ரீதி­யா­கவோ பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்­பா­கவோ நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்டுச் செல்­ல­வில்லை.

முத­லா­வ­தான சோல்­பரி யாப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த 27(C) சரத்­தையும் திட்­ட­மிட்டு புறந்­தள்­ளியே 1956 இல் சிங்­களம் மட்டும் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அதனால் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்கள், பலத்த உயிர், உடமை அழிப்­புகள் வர­லாறு.

பின்பு 1972 இல் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அர­சாங்­கத்தால் குடி­ய­ரசு யாப்பு மற்றும் 1978 இல் ஜே.ஆர்.ஜய­வர்­தன அர­சாங்­கத்தால் நிறை­வேற்­றப்­பட்ட எதேச்­ச­தி­கார நிறைவேற்று ஜனா­தி­பதி முறை­மை­யி­னா­லான யாப்பு இரண்டுமே, குறிப்­பாக புரையோடிப் போயுள்ள தமிழ் தேசிய இனப்­பிரச்­சி­னைக்கு ஒரு நீதி நியாயமான, தமிழரின் இறை­மை­யுடன் கூடிய சமத்­து­வத்தை அங்­கீ­க­ரிப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் அற்ற நிலை­யி­லேயே 26 வருட கால யுத்தம் கோரத்­தாண்­ட­வ­மா­டி­யது. அதன் கார­ண­மாக எல்லா இன மக்­களும் பாதிக்­கப்­பட்­ட­தோடு, தமிழ் மக்கள் இலட்­சக்­க­ணக்கில் வர­லாறு காணாத அழித்­தொழிப்­புக்கு ஆளாக்­கப்­பட்­டனர்.

எனவே, கடந்த கால அட்­டூ­ழி­யங்கள் நிறைந்த நிலை­மையை மீண்டும் ஏற்­ப­டாத வகையில் புதிய அர­சியல் யாப்பு வடி­வமைக்­கப்­ப­டு­வ­தோடு நடை­மு­றைப்­படுத்­தவும் வேண்டும்.

அதா­வது, இனி மேலா­வது நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்­டுச்­செல்ல வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இருக்க முடி­யாது. அதுவே நிஜ­மான நல்­லாட்­சி­யாக இருக்க முடியும்.

புதிய அர­சியல் யாப்பு கூட மத சார்­பற்­றது என்­ப­தற்­கில்லை.

அர­சியல் வேறு, மதம் வேறு என்­ப­தற்கு மாறாக இன்று மதம் தான் அர­சி­ய­லாக மாறி விட்­ட­தான எதிர்­ம­றை­யான தோற்­றப்­பாட்­டையே தொடர்ந்து காண முடி­கி­றது.

இதுவும் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் ஒரு நீட்சி என்ற கூட கூற முடியும். ஆயினும், பௌத்­தத்­திற்கு அதி­யுயர் ஸ்தானம் என்ற சம கால யதார்த்­தங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்ற போர்­வையில் காய்கள் நகர்த்­தப்­ப­டு­கின்­றன.

மறுபுறத்­தில், தமிழ் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு புதிய அர­சியல் யாப்பின் மூலம் தீர்வு காணப்­படும் என்று கடந்த ஜனா­தி­ப­தித்­தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்றத் தேர்தல் பிரசாரங்­களின் போது அளிக்கப்­பட்ட வாக்­குறுதி எவ்­வாறு நடை­மு­றைக்கு வரப்போகிறது?

தற்­போ­தைய யாப்பில் உள்ள 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் எவ்­வளவு தூரம் செல்வ­தற்கு இட­ம­ளிக்­கப்­படப் போகி­றது என்­பதை பார்க்க வேண்டும்.

mahinda_11   இத­னி­டையில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹி­ந்த ராஜ பக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி தரப்­பினர் இன­வாதக் கூக்­குரல் இட்டு வரு­கின்­றனர்.

உதா­ர­ண­மாக, அண்­மையில் மஹிந்த ராஜபக் ஷ ஒரு கொள்கை அறிக்­கையை விடுத்தி­ருந்தார்.

அதா­வது, முத­லா­வ­தாக, சமஷ்டி ஆட்சி முறை­யினை அறி­மு­கப்­ப­டுத்தி நாடு பிரிக்கப்படு­வ­தாக மேற்­படி அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ளது.

அத்­தோடு, பொது எதி­ரணி சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆலாய்ப்­ப­றந்து விஷமத்­த­ன­மான பிர­சாரம் செய்து வரு­கின்­றனர்.

அவர்கள் இவ்­வாறு படு பிழை­யான பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து வரு­வது நிச்­ச­ய­மாக தேசத்­து­ரோ­கத்­திற்கு ஒப்­பா­ன­தாகும்.

இதனை அவர்கள் தேசப்­பற்று என்று அர்த்தம் கற்­பித்து வரு­வது, தேசப்­பற்று என்­பது கடை கெட்­ட­வர்­களின் புக­லிடம் என்று அறிஞர் பேர்னாட் ஷா மற்றும் சாமுவேல் ஜோன்சன் கூறி வைத்த வியாக்­கி­யா­னத்­திற்கு ஒப்­பா­ன­தாகும்.

சிங்­கள மக்­களை திசை திருப்பி அர­சி­ய­ல­மைப்பு சபை முன்­னெ­டுத்து வரும் முயற்சிகளை தடம்­பு­ரளச் செய்து விடலாம் என்று அவர்கள் செய்து வரும் பிர­சாரம் பின்­வ­ரு­மாறு:-

அர­சி­ய­ல­மைப்பு வழி­காட்டல் குழுவின் மத்­தி-­ பி­ராந்­தியம் எனும் தலைப்­பி­லான உப குழு­வா­னது மாகாண ஆளு­நர்­களின் தற்­று­ணிவு அதி­கா­ரத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு பரிந்­து­ரைத்­துள்­ளது.

அதா­வது, மாகாண சபை­யினால் நிறை­வேற்­றப்­படும் நிய­திச்­சட்­டங்­க­ளிற்கு சட்ட வலுவழங்­கு­வ­தற்­கான ஆளு­நரின் அதி­காரம் அகற்­றப்­பட்டு, அது மாகாண சபையின் தவி­சா­ள­ருக்கு வழங்­கப்­பட உள்­ளது.

அதா­வது, நிய­திச்­சட்­டத்தில் ஏதா­வது திருத்தம் செய்­யப்­ப­ட­வேண்­டு­மாயின், நியதிச்சட்டத்தை மீண்டும் மாகாண சபைக்கு அனுப்­பு­வ­தற்கோ அல்லது அவசியமாயின் உச்ச நீதி­மன்­றத்­திற்கு பாரப்­ப­டுத்­து­வ­தற்­காக ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைப்­ப­தற்கோ ஆளு­ந­ருக்கு உள்ள தற்­று­ணி­வான அதி­காரம் அகற்­றப்­படப் போகி­றது.

மேலும், மாகாண அரச சேவை சம்­பந்­த­மான ஆளு­நரின் அதி­காரம் முத­ல­மைச்­ச­ருக்கும் மாகாண அமைச்­ச­ர­வைக்கும் வழங்­கப்­ப­டு­கி­றது.

மற்றும், முத­ல­மைச்­சரின் ஒப்­பு­த­லு­ட­னேயே ஆளுநர் பதவி நிய­ம­னங்­களை வழங்க முடியும் என்­பது மட்­டு­மல்­லாமல், முத­ல­மைச்சர் மற்றும் மாகாண அமைச்­சர்­களின் ஆலோ­ச­னை­யு­ட­னேயே ஆளு­நர்கள் தமது கட­மை­களை நிறை­வேற்ற முடியும்.

அதுமட்­டு­மல்­லாமல், தற்­போ­துள்ள ஒத்­தி­சைவுப் பட்­டியல் நீக்­கப்­பட்டு அவ்வதிகாரங்களும் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட உள்­ள­தால், மத்­திய அரசாங்கமும் மாகாண சபை­களும் வெவ்­வே­றான அதி­கார மையங்­க­ளாகி விடு­கின்­றன.

அதனை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் மாவட்டச் செய­லா­ளர்­களும் பிர­தேச செயலா­ளர்­களும் மாகாண சபை­களின் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வரப்­ப­டு­வ­தோடு, மாகா­ணங்கள் தோறும் செயற்­படும் அரச சேவை ஆணைக்­குழுக்கள் மாகாண சபைகளினதும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் சேவை­யாளர் பட்­டி­யல்­களை திறைசேரியின் கண்­கா­ணிப்­பின்றி தீர்­மா­னித்­துக்­கொள்ள முடியும்.

அரச காணி சம்­பந்­த­மான அதி­கா­ரங்­க­ளையும் மாகாண சபை­க­ளுக்கு கைய­ளிப்­ப­தற்­கான யோச­னையும் மேற்­படி மத்­தி-­ பி­ராந்­தியம் உப குழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மாகா­ணங்­களில் உள்ள ஏதா­வது காணிகள் மத்­திய அர­சாங்­கத்தின் உப­யோ­கத்­திற்கு தேவை­யாயின் மாகாண அதி­கா­ரி­களின் ஒப்­பு­த­லு­ட­னேயே அவற்றைக் கைய­கப்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

அடிப்­படை உரி­மைகள் உப­குழு

சிங்­க­ளமும் தமிழும் அரச கரும மொழி­க­ளா­யி­ருக்க வேண்­டு­மென்­பது அடிப்­படை உரிமைகள் உப­கு­ழு­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முக்­கி­ய­மா­ன­தொரு பரிந்துரையாயுள்­ளது.

மஹிந்த ராஜ­பக் ஷவின் கொள்கை அறிக்­கையின் பிர­காரம் இது ஏற்­பு­டை­ய­தல்ல என்ற அவ­ரது நிலைப்­பாடு தெரி­கி­றது.

1956 இல் சிங்­களம் மட்டும் சட்டம் இயற்­றப்­பட்ட பின்பு, 1987 இல் எட்­டப்­பட்ட இலங்கை-­ – இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் இலங்­கையின் அரச கரும மொழி சிங்­களம் என்­பது கட்­டாயம் என்­ப­தோடு தமிழ் மற்றும் ஆங்­கில மொழி­களும் அரச கரும மொழி­க­ளாக இருக்கும் என்­பதே உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தது.

இன்று மேற்­கு­றித்த உப­குழு சிங்­க­ளமும் தமிழும் அரச கரும மொழி­களாய் இருக்க வேண்டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­பதை மஹிந்த ராஜ­பக் ஷவினால் ஜீர­ணித்துக் கொள்ள முடி­ய­வில்லை என்­பது தெரி­கி­றது.

அதா­வது, அவர் கற்­பிக்கும் காரணம் யாதெனில் வடக்கு-­, கிழக்கில் தமிழ் நிர்­வாக மொழி­யாக இருக்க வேண்டும் என்றும் அப்­பகு­தியில் சிறு­பான்­மை­யி­ன­ராக விளங்கும் சிங்­கள மக்­களின் நல­னுக்­காக நியா­ய­மான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும் என்றும் 1957 இல் ஏற்­று­க­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

இதுவே, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால் முழு நாட்­டிற்கும் சிங்­களம் அரச கரும மொழி­யா­யி­ருக்கும், அதேவேளை வடக்­கு-­கி­ழக்கில் தமிழ் மொழிக்கு நியா­ய­மான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும் என்று வகுக்­கப்­பட்ட கொள்கை ஆகும் என்று மஹிந்த ராஜ­பக் ஷவின் மேற்­படி அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதா­வது, ஏழு தசாப்­தங்­க­ளுக்கு முன்பு மொழி சமத்­து­வ­மின்­மை­யா­யி­ருந்த நிலைப்­பாடு ஏன் இன்று நீக்­கப்­பட வேண்டும் என்­ப­துதான் இங்கே தொக்கி நிற்கும் வாத­மாகும்.

சிங்­கள அதி தீவி­ர­வா­திகள் சகிதம் தான் ராஜபக் ஷ பய­ணித்து வந்­துள்­ளாரே ஒழிய, 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படும் என்று அன்று இந்­தியப் பிர­தமர் மன்­மோகன் சிங்,

பின்பு இன்­றைய இந்­திய வெளியு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜுக்கும் மற்றும் 2012 இல் இலங்கை வந்­தி­ருந்த முன்னாள் இந்­திய வெளியு­றவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்­ணா­வுடன் கலந்­து­ரை­யா­டிய போதும், 13ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று தீர்வு காணப்­படும் என்று ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­த­தாக அறிக்­கைகள் பதி­வா­கி­யி­ருந்­தன.

அதே ராஜ­பக் ஷதான் 13ஆவது திருத்­தத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்கும் காணி, பொலிஸ் அதி­கா­ரங்­களை கூட வழங்க மாட்டேன் என்று அர­சியல் யாப்பை அப்­பட்­ட­மாக மீறும் வகையில் மார் தட்­டினார்.

முற்­பகல் செய்யின் பிற்­பகல் விளையும் என்­ப­தற்­கி­ணங்­கவே அவ­ருக்­கான அறு­வடை 2015 ஜன­வரி 8ஆம் திகதி கிடைத்­தது.

அன்­றைய தோல்­வியை தாங்க முடி­யாத நிலையில், எவ்­வா­றா­வது சிறி­சே­ன-­ – விக்­கி­ர­ம­சிங்க தேசிய ஒற்­றுமை அர­சாங்­கத்தை கவிழ்த்து விட வேண்­டு­மென்று மேற்­கொண்ட பகீ­ரதப் பிர­யத்­தனம் கார­ண­மா­கவே அவர் இன­வா­தத்தை கக்­கிய வண்ணம் இருக்­கின்றார்.

இன்­னொரு சுவா­ரஷ்­ய­மான விடயம் யாதெனில், ராஜபக் ஷ வெளியிட்ட மேற்­படி கொள்கை அறிக்கை முன்னாள் வெளிநாட்­ட­மைச்­சரும் இன்று ராஜபக் ஷ சார்பு ஸ்ரீலங்கா பொது மக்கள் முன்­ன­ணியின் (ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­முன) தலைமைப்பத­வியில் அமர்த்­தப்­பட்டு இருப்­ப­வ­ரு­மா­கிய பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரி­ஸினால் வரை­யப்­பட்­ட­தாக அறி­கிறோம்.

746403383Untitled-1பீரிஸ்
முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நாயக்­கவின் ஆட்­சிக்­காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதி­கா­ரப்­ப­கிர்­விற்­கான திட்­டத்தை தீட்­டு­வ­தற்கும் பீரிஸ் குறிப்பிடத்தக்­க­ளவு பாகம் வகித்­தவர்.

பின்பு 2001 முதல் 2003 வரை­யான சிறிய காலப்­ப­கு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரதம­ரா­யி­ருந்த போதும் பீரிஸ் முக்­கி­ய­மான பாகம் வகித்­தவர்.

எனவே, பதவி மோக மேலீட்­டினால் தலை­சி­றந்த சட்ட மேதை ஒருவர் தனது ஆத்­மாவை அடகு வைத்­துள்ளார் என்­பது துர்ப்­பாக்­கி­ய­மா­ன­தாகும்.

இறு­தி­யாக, ஆளு­நர்­களின் தற்­போ­தைய அதி­கா­ரத்தை பொறுத்­த­வரை பிர­தா­ன­மாக கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது யாதெனில் அவர்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்கள் அல்லர் என்ற வகையில் அவர்­க­ளுக்கு கூடு­த­லான அதி­கா­ரங்கள் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்து புத்திஜீவிகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒரு தனி நாட்டிற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோர் முனைகின்றனர் என்று மஹிந்த ராஜபக் ஷ சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன போன்றோர் சமஷ்டி முறைமை வழங்கப்படுகிறது, பௌத்தத்திற்கு உள்ள அதியுயர் ஸ்தானம் விலக்கப்படுகின்றது என்று இன்னோரன்ன பொய்யும் புரட்டு­மான கதைகளை புனைந்து தம்மைத் தாமே தாழ்த்திக்கொள்ளும் அரசியல் வங்குரோத்துத்தனத்தை சந்திக்கு கொண்டு வந்துள்ளனர்.

மேலும், அடோல்ஃப் ஹிட்லரின் பேச்சாளராயிருந்த கோயபள்ஸ் பாணியில் பொய் பொய்யாக கூறி அதுதான் இறுதியில் உண்மை என்று தாங்களே விசுவாசித்துக்கொள்ளும் வங்கு­ரோத்துத்தனத்தை வெளிப்படுத்துவதை விட வேறொன்றும் செய்ய முடியாத நிலையிலேயே அவர்கள் உள்ளனர்.

எவ்வாறாயினும், சிறிசேன- – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த நாசகார சக்திகளை தலையெடுக்க விடாது, கடந்த கால இரு தேர்தல்களிலும் வழங்கிய வாக்குறுதிகளை விரைந்து துணிச்சலாக நிறைவேற்ற வேண்டும்.

-வ.திருநாவுக்கரசு-

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.