ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா?! பரபரக்கும் கார்டன் காட்சிகள்

0
317

சசிகலா முதல்வராக தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு போயஸ் கார்டன் வீடு பரபரப்பாகி விட்டது. தினமும் அங்கு கட்சியினர் கூட்டம் அலைமோதுகிறது.

சசிகலாவை சந்தித்துவிட்டு தங்களது ஆதரவை தெரிவித்துவிட்டுச் செல்கின்றனர் கட்சியினர்.

தற்போது கட்சியின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அடுத்து அவர் முதல்வராக பதவியேற்க இருப்பதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான நடவடிக்கையில் சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. தற்போதுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அந்த பதவியை சசிகலாவுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராகி விட்டார். இதனால் சசிகலா, விரைவில் முதல்வராக உள்ளார் என்கின்றனர் கார்டன் வட்டாரங்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடுத்து யார் முதல்வர் என்று கட்சியினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது பெயரை கட்சியினர் முன்மொழிந்தனர்.

சசிகலா தரப்பினரின் ஆதரவு பழனிச்சாமிக்கு இருந்தது. ஆனால் மத்திய அரசின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடைத்ததால் வேறுவழியின்றி அவரே முதல்வரானார்.

அப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக யாரும் போர்க்கொடி தூக்கவில்லை.

இதன்பிறகு டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திரமோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருவரும் தனியாகவும் சந்தித்தனர். அப்போது மோடி, தமிழகத்தில் உள்ள அரசியல் நிலவரங்களை கேட்டறிந்ததோடு, ஓ.பன்னீர்செல்வத்திடம் நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள் என்றும் சொல்லியுள்ளார்.

இதனால் டெல்லியிலிருந்து மகிழ்ச்சியோடு திரும்பிய ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் சுறுசுறுப்புடன் பணிகளை மேற்கொண்டார்.

இதற்கிடையில் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்று முடிவு செய்யும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடர்பான ஆலோசனைக்காக கார்டனுக்கு அழைக்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

அப்போது சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் நீண்ட நேரம் பேசியுள்ளனர். அப்போதுதான், சசிகலா, ஆட்சி அதிகாரமும், கட்சியின் அதிகாரமும் ஒருவருடைய கையிலேயே இருக்க வேண்டும்.

அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். இந்த முடிவு எடுக்க வேண்டியது நீங்கள்தான் என்று சூசகமாக சசிகலா சொல்லியுள்ளார்.

அதைப் புரிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், நீங்கள்தான் எல்லாவற்றுக்கும் சரியான நபர் என்று சசிகலாவிடம் சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து சசிகலா, பொதுச் செயலாளரானார். அடுத்து முதல்வராகுவதற்கான ஏற்பாடுகளை சசிகலா தரப்பு செய்து வருகிறது” என்றார்.

 “சசிகலா முதல்வராகும் முடிவை கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

அவர், ஜனவரி 12க்குள் முதல்வராவார் என்றும் மன்னார்குடியினர் ஆரூடம் சொல்லி வரும் நேரத்தில் அதற்கான வழியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஏற்படுத்தி இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் சொல்கின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், தற்போது வகித்து வரும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்து விட்டார்.

இதனால் சசிகலா, முதல்வராவதில் எந்த சிக்கலும் இல்லை. தற்போது, தமிழக ஆளுநரிடம்  முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கான ஆதரவு கடிதம், அமைச்சரவைப் பட்டியலை விரைவில் கொடுக்க உள்ளோம்.

அதன்பிறகு சசிகலா தலைமையிலான புதிய அமைச்சரவை செயல்படும். தற்போதுள்ள சூழ்நிலையில் பழைய அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் இருக்காது.

இதையொட்டியே மாவட்ட நிர்வாகிகளிடம் சசிகலா ஆலோசனை நடத்துகிறார். அதிலும் சசிகலாவையே முதல்வராகும்படி கட்சியினர் வலியுறுத்துவார்கள்” என்கின்றனர் கார்டன் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

 ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “சசிகலாவின் கட்டுபாட்டுக்குள் கட்சி உள்ளது.

அடுத்து அவர்தான் முதல்வர் என்று சசிகலா தரப்பினர் சொல்லி வருகின்றனர். அப்படியென்றால் ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய அந்த தரப்பு நிச்சயம் வலியுறுத்தும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தால் பிளவு ஏற்படக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

OPS_long_1_14147இதற்காக சசிகலா சொல்வதற்கு கட்டுப்பட்டு அவரது செயல்பாடு இருக்கிறது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னாலும் அதை செய்யவும் தயாராக இருக்கிறார்” என்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.