20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார் -(வீடியோ)

0
383

ஜப்­பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வரு­டங்கள் தனது மனை­வி­யுடன் பேசு­வதை தவிர்த்து வந்தநிலையில், அண்­மையில் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார்.

ஒட்டோவ் கேட்­டே­யமா எனும் இந் ­நபர் தனது மனைவி­யுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வரு­ட­ கா­ல­மாக இரு­வ­ருக்கும் இடையில் பேச்­சு­வார்த்­தைகள் எதுவும் நடக்­க­வில்லை.

யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகு­வாக பாதித்­ததால் அவ­ருடன் பேசு­வதை கேட்­டே­யமா நிறுத்­தி­னாராம். அவரின் மனைவி கேட்­டே­ய­மா­வு­டன பேசுவதற்கு முற்­பட்­ட­போ­திலும் கேட்­டே­யமா இதை விரும்­ப­வில்லை.

21549930718abbff5c56e3216e31b40aaf837தமது பெற்றோர் முதல் தடவையாக உரையாடுவதை பார்க்கும் பிள்ளைகள்

ஆனால், இவர்கள் தொடர்ந்தும் ஒரே வீட்டில் தம்­ப­தி­க­ளாக வசித்து வந்­தனர். இவர்­க­ளுக்கு 18 வய­தான மகனும் இரு மகள்­களும் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், ஜப்­பா­னிய தொலைக்­காட்சி நிறு­வ­ன­மொன்றை தொடர்பு கொண்ட 18 வய­தான யோஷிகி, தனது தந்­தையும் தாயும் உரை­யா­டு­வதை ஒரு­போதும் தான் செவி­ம­டுத்­த­தில்லை எனக்­கூறி இவ் ­வி­ட­யத்தில் உத­வு­மாறு கோரினார்.

21549husband1திருமணத்தின்போது…

அதன்பின் அத் ­தொ­லைக்­காட்சி நிறு­வ­னத்தின் நிகழ்ச்­சியில் தனது மனை­வி­யுடன் மீண்டும் பேச ஆரம்­பித்­துள்ளார் கேட்­டே­யமா. தனது மனைவி பிள்­ளைகள் மீது அதிக அக்­கறை காட்­டு­வதால் தான் பொறா­மை­ய­டைந்­ததாக கேட்­டே­யமா கூறி­யுள்ளார்.

எனினும், யுமி, இவ்­வ­ளவு கால­மாக நீங்கள் மிகவும் சிர­மப்­பட்­டுள்­ளீர்கள். அனைத்து விட­யங்­க­ளுக்­கா­கவும் நான் கடமைப்பட்டுள்ளேன் என தனது மனைவி யிடம் கேட்டேயமா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.