பசிலின் மகன் அசங்க அரசியலுக்கு வருகிறார்..!! கடுப்பில் மகிந்த and சன்ஸ்

0
415

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மகன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் காரணமாக ராஜபக்ச குடும்பத்தினுள் பாரிய கொந்தளிப்பு நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை அறிந்துக் கொண்டவுடன் மஹிந்த, உடனடியாக பசில் ராஜபக்ஷவுடன் தொடர்புகொண்டு உண்மை நிலையை அறிந்துள்ளார். இதன்போது அரசியல் பிரவேசம் தொடர்பாக தகவல் உண்மைக்குப் புறம்பானது என பசில் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுக்கு தெரியாதா யாராவது என்னிடம் எதனையாவது கூறுவார்கள்”… என மஹிந்த கூறிவிட்டு தொலைப்பேசி அழைப்பினை துண்டித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நாமல், சானக, விஜேசேகர, ரோஹித அபேகுணவர்தன, ரத்வத்தே, யோஷித உட்பட குழுவினர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் மஹிந்த தொலைப்பேசி அழைப்பை துண்டித்த நிலையில், சிரித்தவாறு “பசில் தந்திரக்காரன்” என குறிப்பிட்டுள்ளார்.

நாமல் தான் காரணம் இல்லாமல் குழப்பமடைகின்றார்.. இன்னும் ஒன்று பசிலுக்கு அரசியல் செய்ய முடியாது என மஹிந்த கூறியுள்ளார்.

பசில் சித்தப்பாவின் செயற்பாடு காரணமாகவே அன்று நாம் தாக்கப்பட்டோம்.

இந்த முறை என்ன செய்யப்போகின்றாரோ என தெரியவில்லை. அசங்க (பசிலின் மகன்) தம்பிக்கு அரசியலில் விருப்பம் இல்லை என நான் நினைக்கின்றேன் என இதன் போது நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.