டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தயார்: ரஷ்ய அதிபர் புதின்

0
1734

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்பை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

டிரம்பை சந்திப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புதின், “நாங்கள் எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களது பக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் அமெரிக்க-ரஷ்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். எங்களால் இது முடியாது. இருந்தாலும் இதனை ஆதரிக்கிறோம்.

அதிபர் நிர்வாக பொறுப்பில் சேர்ந்த பிறகே டிரம்பை சந்திக்க முடியும்.” என்று பதில் அளித்தார்.

டொனால்டு டிரம்ப் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கிறார். இம்மாதமே டிரம்ப், புதின் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

அவரது இந்த வெற்றிக்கு ரஷியா உதவியதாக அமெரிக்காவின் ‘சி.ஐ.ஏ.’ உளவுத்துறை ரகசிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அது குறித்து விசாரணை நடத்த தற்போதைய அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து டொனால்டு டிரம்ப் கூறுகையில், உளவுத்துறை அளித்துள்ள அறிக்கை முட்டாள் தனமானது என்று கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.