சொந்த பேத்தியை திருமணம் செய்துக் கொண்ட தாத்தா, காதலுக்கு இதொரு தடையில்லையாம்!

0
2255

ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த 68 வயது மில்லியனர் சில மாதங்களுக்கு முன்னர் 24 வயது பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார்.

ஆரம்பத்தில் இவர்களுக்குள் எழாத சந்தேகம், சில மாதங்கள் கழித்து தான் எழுந்தது. அதன் இறுதியில் தான் இருவரும் தாங்கள் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என அறிந்தனர்.

weds

மூன்றாவது திருமணம்!
ப்ளோரிடாவை சேர்ந்த அந்த மில்லியனர் ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மூன்றாவது திருமணம் செய்துள்ளார். முதல் இரண்டு குடும்பங்களுடன் பெரிதாக தொடர்பு ஏதும் இல்லாமல் தான் வாழ்ந்து வந்துள்ளார் அந்த மில்லியனர்.

wed

ஜாக்பாட்!
இரண்டாவது திருமணம் விவாகரத்து பெற்ற இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் அவருக்கு ஜாக்பாட் மூலம் மில்லியன் டாலர்கள் பணம் கிடைத்தது. இதன் மூலம் தான் அவர் பெரும் செல்வந்தர் ஆனார்.

wedss

ஆன்லைன் டேட்டிங்!
சமீபத்தில் தான் ஆன்லைன் மூலமாக டேட்டிங் செய்து வந்த 24 வயது பெண்ணை ப்ளோரிடா மில்லியனர் திருமணம் செய்துக் கொண்டார். இந்த பெண்ணும் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர் தான். டீனேஜ் வயதிலேயே கருவுற்றதால் வீட்டை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

wedssss

போட்டோ ஆல்பம்!
திருமண வாழ்வில் இணைந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த வாழ்வில் அதிர்ச்சியளித்தது ஒரு போட்டோ ஆல்பம். ஒரு போட்டோவில் அந்த பெண் தன் தந்தையின் புகைப்படம் கண்டு அதிர்ச்சி அடையவே… பிறகு விசாரித்த போது தான் தாங்கள் இருவரும் தாத்தா பேத்தி உறவு முறை கொண்டவர்கள் என இருவரும் அறிந்துள்ளனர்.

wdsssவிவாகரத்து இல்லை!
தாத்தா, பேத்தி உறவுமுறை கொண்டவர்கள் என தெரிந்த பிறகும் கூட இருவரும் சேர்ந்து வாழவே விரும்புவதாக இருவரும் தெரிவிக்கின்றனர். உண்மையான காதலுக்கு தடைகள் ஏதுமில்லை என்கின்றனர் இந்த வினோத தம்பதியினர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.