வட மாகாண சபைக்கு தனியான தேசிய கீதமா? முற்றாக மறுக்கும் சிவஞானம்!

0
710

வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதம் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையில் தனியான தேசிய கீதம் என்ற தலைப்பில் தேசிய பத்திரிகையொன்றில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரங்க கலந்சூரியவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

குறித்த செய்தித் தாளில் வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியானது போலியானதும் திரிபுபடுத்தப்பட்டதுமான செய்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை நிறுவப்பட்டு மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் ஏனைய மாகாணங்களைப் போன்று வட மாகாண சபைக்கு தனியான கீதம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றே தாம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது கோரிக்கையை திரிபுபடுத்தி தேசிய பத்திரிகையொன்று பிழையான செய்தியை வெளியிட்டுள்ளதாக சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.