இரவு நேரப் பார்வை திறனை அதிகரிக்கும் கஞ்சா: ஆய்வில் தகவல்!!

0
7586

மது வகைகள் உட்பட ஏனைய போதைப் பொருட்கள் யாவும் உடல் பாகங்களின் இயக்கத்தினை அதிரிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

எனினும் இவற்றின் பாவனை எல்லை மீறும்போது பாரிய ஆபத்துக்களை பாவிப்பவர்களுக்கும், சுற்றியிருப்பவர்களுக்கும் ஏற்படுத்திவிடுகின்றது.

இப்படியிருக்கையில் இரவு நேரத்தில் பார்க்கும் திறனை அதிகரிக்கும் திறன் கஞ்சாவிற்கு இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Mo Costandi என்பவர் இது தொடர்பாக த கார்டியனுக்கு தகவல் அளித்துள்ளார்.

மேற்கிந்தியாவில் உள்ள மீன் பிடிப்பவர்கள் இரவு நேரங்களில் கடலுக்கு செல்ல முன்னர் புகைப்பது அல்லது ரம் எனும் பானத்தை உள்ளெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

இதனை 25 வருடங்களுக்கு முன்னரே மேற்கிந்திய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருந்தியலாளரான M. E. West என்பவர் அவதானித்து ஆராய்ந்துள்ளார்.

இவ் ஆய்வின் தொடர்ச்சியின் ஊடாகவே தற்போது இரவு நேரத்தில் கஞ்சா உள்ளெடுப்பதன் ஊடாகவும் பார்வை திறனை அதிகரிக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.