கருப்பு நிறத்தழகி, ஃபேஷன் உலகை வியக்க வைக்கும் டாப் கிளாஸ் செக்ஸி மாடல்!

0
2162
நமது சமூகத்தில் ஒரு சில கேலி இலச்சினைகள் உள்ளன, குட்டை, குண்டு, கருப்பு. ஒருவர் குட்டையாக இருப்பதற்கும், குண்டாக இருப்பதற்கும், கருப்பாக இருப்பதற்கும் அவர்கள் காரணமல்ல, அவர்களது மரபணு மற்றும் ஹார்மோன்கள் தான் காரணம்.
ஆனால், இங்கு திறமையற்றவர்களை விட அழகாக இல்லை என்பதற்காக கேலி, கிண்டல் செய்யப்படுபவர்கள் தான் ஏராளம்.
khoudiadiopthedarkestmodelintheworld-08-1475920450

பொது மக்கள் கருத்தே இப்படி இருக்கிறது எனில், ஃபேஷன் உலகில் எப்படி இருக்கும். வெள்ளை தான் அழகா? கருப்பு என்றால் கேலியா? என்ற கேள்விக்கு பதிலாய் வந்து நிற்கிறார் கருப்பு நிறத்தழகி கௌதியா டியோப்…  (Khoudia Diop)
1

கௌதியா டியோப்! (Khoudia Diop)

கௌதியா டியோப் தான் உலகின் கருப்பான மாடல் அழகி எனும் புகழாரத்தை தாங்கி நிற்கிறார். கருப்பு நிறத்தழகி கௌதியா டியோப் மெலனின் பியூட்டி என்றும் அழைக்கப்படுகிறார்.

Khoudia-Diop-1தனித்தன்மை!

ஃபேஷன் உலகில் தற்போது கௌதியா டியோப் வியக்கும் அழகுடன் தனித்தன்மையுடன் திகழ்கிறார். ஃபேஷன் ரசிகர்கள் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவரும் இவரை பின்தொடர காரணமே இவரது கருப்பு அழகு தான்.

08-1475920380-3khoudiadiopthedarkestmodelintheworld
ஏணியில் ஏற்றிவிட்ட கேமரா!
புகைப்பட கலைஞர் ஒருவர் இவரது கருப்பு அழகை கண்டு, தனது மூன்றாவது கண்ணான கேமரா கொண்டு சிலபல படங்களை தட்டிவிட, இப்போது ஃபேஷன் உலகில் களைக்கட்ட துவங்கியுள்ளார் கௌதியா டியோப்.
Khoudia-Diop-3புனைப்பெயர்கள்!

இவர் தனக்கு தானே மெலனின் பியூட்டி என்று புனைப்பெயர் வைத்துக் கொண்ட போதிலும், ஃபேஷன் உலகில் இவருக்கு பல பெயர்கள் இருக்கின்றன. அவை,

“டார்க்கி”, “இரவில் மகள்”, “நட்சத்திரங்களின் அன்னை”.

3khoudia_1475568285பாசிட்டிவிட்டி!
தற்போது ஆப்ரிக்கா பெண்களுக்கு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியாக திகழ்பவர் கௌதியா டியோப் தான்.
ஆப்ரிக்கா பெண்களிடமே கூட தங்கள் நிறம் சார்ந்த தாழ்வுமனப்பான்மை இருந்து வந்தது.

அதை தகர்த்து எறிந்துள்ளார் கௌதியா டியோப். கருப்பு என்பது வெள்ளை போன்ற மற்றொரு வண்ணம் தான் அழகுக்கு கருப்பு ஒரு தடையல்ல என நிரூபித்து வருகிறார் கௌதியா டியோப்.

Khoudia-Diop-9

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.