பயணத்தினை இலகுவாக்க அறிமுகமாகிறது பறக்கும் கார் -(படங்கள், வீடியோ)

0
7618

பறக்கும் கார்களை 2018 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

L-AeroMobil-3.0-est-dotee-de-deux-placesஇருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப்பட்டுள்ளது.

Les-fondateurs-Stefan-Klein-et-Juraj-Vaculikவீதியில் பயணிக்கும் சாதாரண கார் போன்று காட்சியளிக்கும் இந்த கார், ஒரு ஆளியினை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறும். இதன்மூலம் வானில் பறக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

L-AeroMobil-3.0-a-des-ailes-retractablesவிமானத்தைப் போல் இல்லாமல் எந்தவொரு சமதளப்பரப்பிலும் இந்த காரைத் தரையிறக்கவும், அந்த பரப்பிலிருந்தே வானில் பறக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மீற்றர் நீளமும், 2.4 மீற்றர் அகலமும் கொண்டள்ளது.

imageகுறித்த கார் தரையில் அதிகூடிய வேகமாக மணிக்கு 160 கிலோமீற்றரும், பறக்கும் போது மணிக்கு 320 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவித்துள்ளது.

L-AeroMobil-3.0-a-une-helice-a-l-arriereஇதன்மூலம் நீண்டதூரப் பயணங்களுக்கு ஆகும் நேரத்தைக் குறைக்கவும், போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கவும் முடியும் என்று ஏரோ மொபில் நிறுவனம் கூறியுள்ளது.

 

L-AeroMobil-3.0-a-des-ailes-retractablesIl-faut-une-license-de-pilote-prive-pour-conduire-le-vehiculeLa-voiture-volante-est-dotee-de-deux-placesimage54516470_

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.