யாஹூ நிறுவனத்தின் 50 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருட்டு!

0
400

சமூக இணையத்தளமான யாஹூ இணையத்தை பயன்படுத்தும் 50 கோடி பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்நிறுவனம் தகவல் தெரிவிக்கையில் கிரடிட்கார்ட் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் யாஹூ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பயனர்கள் தமது கடவுச்சொல்லை மாற்ற வேண்டும் என யாஹூ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பெயர்கள், மின்னஞ்சல்கள் முதலான தனிப்பட்ட தகவல்களும்,சங்கேத குறியீட்டு மொழியில் மாற்றப்படாத பாதுகாப்பு கேள்வி பதில்களும் இவற்றுள் அடங்கும். இது வரலாற்றில் மிகப்பெரிய சைபர் ஊடுருவலாக அமைந்துள்ளதென கருதப்படுகிறது.

இதன் பின்னணியில் ஒரு தேசம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அமெரிக்காவின் எப்பிஐ நிறுவனம் விசாரணைகளை மேற்கொள்கிறது.
இதேவேளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த ஊடுருவல் அரசாங்கத்தின் அனுசரணையுடனே ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டது. முன்னர் ஏற்பட்ட ஊடுருவல் ரஷ்ய புலனாய்வு பிரிவினரின் தொடர்பும் இடம்பெற்றிருப்பதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் பிபிசி செய்தி ஸ்தாபனத்துக்கு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.