ஆப்பிள் நிறுவனம் இம்முறை அறிமுகம் செய்த ஐபோன்களில் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டுள்ளது.
வையர் ஹெட்போன்களில் இருந்து மக்களுக்கு விடுதலையளிக்கும் விதமாகவும், ஐபோனில் பெரிய பேட்டரி வழங்கவும் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது.
புதிய ஐபோன்களுடன் வையர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்திருக்கும் ஆப்பிள் அவற்றின் விலையையும் அதிகமாகவே நிர்ணயம் செய்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.
ஐஃபிக்சிட் எனும் நிறுவனம் ஆப்பிள் வழங்கிய தகவல்களுக்கு எதிராக புதிய கருத்துக்களை வழங்கியுள்ளது.
புதிய ஐபோன் கருவிகளை பயன்படுத்தியதோடு முழுமையாக ஆய்வு செய்த பின் இந்தக் கருத்துக்களை வழங்கியிருப்பதாக ஐஃபிக்சிட் தெரிவித்துள்ளது.
அதன் படி ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளில் ஹெட்போன் ஜாக் நீக்கியதற்கான உண்மை காரணத்தினை ஐஃபிக்சிட் வெளிப்படுத்தியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்
ஐஃபிக்சிட் புதிய ஐபோன் கருவியை முழுமையாக ஆய்வு செய்தமையால் அதில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் குறித்த சில தகவல்களை விரிவாக வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய கருவியில் டாப்டிக் என்ஜின் அதிகளவு இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டது தெரியவந்திருக்கின்றது.

புதிய கருவியின் டாப்டிக் என்ஜின் ஐபோனின் வழக்கமான ஹெட்போன் ஜாக் பகுதியையும் ஆக்கிரமித்திருக்கின்றது. டாப்டிக் என்ஜின் தவிர்த்து பெரிய பேட்டரி வழங்கப்படுவதால் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுகின்றது என ஆப்பிள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய கருவியில் பெரிய பேட்டரி வழங்கப்படுவதால் ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும் புதிய கருவியின் டாப்டிக் என்ஜின் ஆப்பிளின் முந்தைய ஐபோன் கருவியை விட பெரியதாக இருக்கின்றது என ஐஃபிக்சிட் தெரிவித்துள்ளது.

புதிய ஐபோன் 7 கருவி நல்ல விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஹெட்போன் ஜாக் நீக்கப்பட்டது உண்மையில் நல்லது தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே சந்தேகம் புதிய கருவியின் பேட்டரியிலும் எழுந்துள்ளது.
ஐபோன் 7 பிளஸ் கருவியில் 2900 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6எஸ் பிளஸ் கருவியில் 2750 எம்ஏஎச் பேட்டரியும், ஐபோன் 6 பிளஸ் கருவியில் 2915 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபோன்களின் வாட்டர் ப்ரூஃப் அம்சத்தினை தரம் கொண்டதாக மாற்ற அதிகளவு பசையை ஆப்பிள் பயன்படுத்துகின்றது. மேலும் டிரை-பாயிண்ட் திருகாணிகளை பயன்படுத்துகின்றது, இவை கருவியை பாழாகாமல் பார்த்து கொள்ளும் என ஐஃபிக்சிட் தெரிவித்துள்ளது.