சிங்கராஜா வனத்தை அண்டிய பகுதியிலும் அரிய வகை புதிய பாம்பு கண்டுபிடிப்பு; விஷத்தன்மையற்ற இந்தப் பாம்பு கோபமடையும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது

0
681

சிங்­க­ராஜா வனத்தை அண்­டிய பிர­தே­சத்தில் இலங்­கைக்கு உரித்­தான அரிய வகை புதிய பாம்பு இனம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யி­லுள்ள பாம்­புகள் தொடர்­பான சிரேஷ்ட ஆராய்ச்சி நிபு­ண­ரான மெண்டிஸ் விக்­ர­ம­சிங்­க­வினால் இது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மறை­வான பிர­தே­சங்­களை அண்டி வாழும் இத்­த­கைய பாம்பு இனம் இற்­றைக்கு 12 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தெனி­யாய பிர­தே­சத்தின் சிங்­க­ராஜா வனப்­ப­கு­தியில் காணப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு பின்னர் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் போது இலங்­கையின் குடவ, அத்­வெல்­தொட, பெலேன,ககு­லே­கங்க ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் இந்த புதி­ய­வகை பாம்பு இனம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்­தது.

193132இத­னை­ய­டுத்து முன்­வைக்­கப்­பட்ட ஆரா­ய்ச்சி அறிக்­கை­க­ளுக்­க­மைய Dendrelaphis sinharajensis என்ற விஞ்­ஞானப் பெயருடன் இந்த பாம்பு உல­குக்கு அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டது.

கீழைத்­தேய மழைக்­கா­டு­களை அண்டி வாழும் இப்­ பாம்­புகள் நச்­சுத்­தன்­மை­யற்­றது என மெண்டிஸ் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 57.69 சது­ர­கி­லோ­மீற்றர்
பகு­தி­யினுள் கண்­டி­பி­டிக்­கப்­பட்ட இப்­ பாம்பு மிகவும் அரிய வகையை சார்ந்­தது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

19313467.2 சென்­றி­மீற்றர் நீளத்தைக் கொண்ட இப் ­பாம்பு மெல்­லிய உருளை வடி­வான உட­ல­மைப்­பி­னையும் சற்று பெருத்த தலை­யையும் கொண்­டுள்­ளது.

உடல் முழு­வதும் சிவப்பு நிறத்­தி­னா­லான இப்­ பாம்பின் உடலில் கறுப்பு மற்றும் வெள்ளை கோடு­களும் காணப்­ப­டு­கின்­றன.

193137இப்­ பாம்­புகள் கோப­ம­டையும் வேளை­களில் அவற்றின் பின்­பக்க உடற்­ப­குதி சற்று பெரி­தா­வ­தோடு உடலும் கடும் சிவப்பாக மாறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

19313Untitled-10அத்துடன் இவற்றின் அடிப்பகுதி கபில நிறத்தில் காணப்படுவதனால் இவை மரத்தில் இருக்கும்போது அதன் நிறம் மரங்களுடன் ஒன்றித்து காணப் படுகின்றது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.