ஒரே நாளில் இரு மகன்களுக்கும் திருமணம் நிச்சயம் செய்யும் நாகார்ஜூனா

0
397

NTLRG_20160909142709966494பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன்கள் நாகசைதன்யா மற்றும் அகிலின் திருமணம் தான் தற்போது டோலிவுட்டில் ஹாட் டாப்பிக். நாகார்ஜூனா மற்றும் அவரது முதல் மனைவி லக்ஷ்மியின் மகன் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலிக்கின்றார்.

நாகார்ஜூனா மற்றும் அவரது இரண்டாவது மனைவி நடிகை அமலாவின் மகன் அகில் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரேயா பூபல் என்பவரை காதலிக்கின்றார்.

இது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இவர்களது திருமணம் ஒரு நல்ல நாளில் அறிவிக்கப்படும் என நாகார்ஜூனா சில தினங்களுக்கு முன்னாள் அறிவித்தார்.

இந்நிலையில் நாகார்ஜூனா, அகில் இருவரின் திருமண நிச்சயதார்த்தங்களும் டிசம்பர் 9 ஆம் தேதி ஒரே நாளில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் நாகசைதன்யா – சமந்தாவின் திருமணம் டிசம்பர் 22 ஆம் தேதியும், அகில் – ஸ்ரேயா திருமணம் அடுத்த வருடமும் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.