தானாக இயங்கி தனிப்பட்ட உதவியாளராக மாறும் கார்!

0
581

 

கார் உரிமையாளர் தனது சாரதியிடம் சொல்லி சொந்த தேவைகளை நிறைவேற்றும் காலத்திற்கு குட்பை சொல்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் எதிர்கால கார்கள் சாரதி இல்லாமல் இயங்குவதோடு, உரிமையாளர்கள் சோம்பேறிப்படும் காரியங்களை தானாக நிறைவேற்றும்.

பெர்லின் நகரில் இடம்பெற்ற இலத்திரனியல் மாநாட்டில், பார்க்கிங் இடங்களை தானாக கண்டுபிடிக்கக் கூடிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் சென்சர்களைப் பயன்படுத்தி, காரில் இருப்பவர்களின் உடல்நிலை அறிந்து, அதற்கேற்றவாறு சூழ்நிலைகளை மாற்றக்கூடிய தொழில்நுட்பம் சேர்க்கப்படும் என கலாநிதி டியற்றர் ஸெட்ஷே தெரிவித்தார்.

உலகின் பல்வேறு நிறுவனங்களும் தானாக இயங்கக் கூடிய கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.