மஹிந்தவின் விஜயத்திற்கு மலேசியத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு : தமிழர்கள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

0
322

MAHI

மஹிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மஹிந்தவின் வருகைக்கு எதிராக மலேசிய தமிழ் உணர்வாளர்கள் மலேசிய காவல்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய அரசுடனும் கலந்துரையாடவுள்ள மஹிந்த பௌத்த விகாரைகளுக்கும் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை மலேசிய அரசிற்கு மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் நன்றாக தெரியும்,

மலேசிய அமைச்சரவையில் இருக்கும் தமிழ் அமைச்சர்களுக்கும் இது நன்றாக தெரியும். இவை நன்றாக தெரிந்திருந்தும் மலேசிய தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் மஹிந்தவை மலேசிய நாட்டிக்குள் வர அனுமதிக்கும் மலேசிய அரசு செய்யும் செயலானது மலேசிய தமிழர்களை அவமதிக்கும் செயல் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக மலேசிய அரசாங்கம் மஹிந்த ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.