ஆண்களால் படுக்கையறையில் அசௌகரியமாக உணரும் பெண்கள்

0
716

பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம். கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில் அவர்கள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது தீண்டுவது வரை பல விஷயங்களை பெண்கள் அசௌகரியமாக உணர்கின்றனர் என்பதை கணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

என்ன தான் தம்பதிகளாக இருப்பினும், சில விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது.

பெண்கள் சிலவற்றை வெளிப்படியாக கூறவும் முடியாமல், பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் தவிக்கலாம்.

கணவன் என்ற உரிமை இருக்கிறது என நீங்கள் அவர்களது அனுமதியின்றி உறவில் ஈடுபடுவதில் இருந்து, படுக்கையில் அவர்கள் அசந்து உறங்கிக் கொண்டிருக்கும் போது தீண்டுவது வரை பல விஷயங்களை பெண்கள் அசௌகரியமாக உணர்கின்றனர் என்பதை கணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனைவியாக இருப்பினும், கணவன் என்ற உரிமை இருப்பினும், அவர்கள் எந்தெந்த விஷயத்தை எப்படி உணர்கிறார்கள் என கணவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்…

மனைவி அசந்து உறங்கும் போது சில்மிஷ வேலைகளில் ஈடுபட வேண்டாம். இது அவர்களின் மனநிலையை வெகுவாக பாதிக்கும் என்பதை கணவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

காலை எழுந்ததும் முத்தமிட்டுக் கொள்வதில் தவறே இல்லை. ஆனால், வாய் துர்நாற்றத்துடன் லிப் லாக் எல்லாம் வெளியே கூற முடியாத அசௌகரியம். இதை பெண்கள் எப்போதும் அனுமதிப்பதில்லை.

தாங்கள் விரும்பாத போதிலும் கூட வற்புறுத்தி உறவில் ஈடுபடுவதும். உறவில் மட்டுமல்ல, சில தீண்டுதல் மற்றும் கொஞ்சுதலை கூட தாங்கள் விரும்பாத போது செய்வது அசௌகரியமாக தான் உணர்கிறோம் என பெண்கள் கூறுகின்றனர்.

தினமும், உறவில் ஈடுபட வேண்டும், அல்லது கொஞ்சி குலாவ வேண்டும் என்று ஆண்கள் நினைப்பார்கள். அதுவும் மனைவி எப்போது தானாக முன்வர வேண்டும் என்று கணவன் நினைப்பார்கள். ஆனால் தினமும் கொஞ்சி குலாவ பெண்கள் விரும்புவதில்லை. எங்கள் உடல் நிலை மற்றும் ஒத்துழைப்பு இருந்தால் தான் ஈடுபட முடியும்.

ஒவ்வொரு முறை என் கணவர் குறட்டை விட்டு தங்கள் உறக்கத்தை கெடுக்கும் போதும் பளார் என கன்னத்தில் வைக்க வேண்டும் என தோன்றும் என்று பெரும்பாலான பெண்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்னனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.